காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள்

அன்புடையீர்
வணக்கம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பினைத் தங்களின்தளத்தில் இட்டு பரவாலக்க வேண்டுகிறேன்.

அன்பு

மு.பழனியப்பன்

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் –
கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1
பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.
பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.
நாள்- 28.1.2017
நேரம் 0 9.30 மணி
இடம்- கிருஷ்ணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி
எதிர்பார்க்கும் தகுதிகள்
உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும் சிறப்பான தேர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முதற்பரிசு- ரூ 1000
ஊக்கப்பரிசுகள் – பங்கேற்கும் ஐவரில் ஒருவருக்கு என ஒவ்வொருவருக்கும், ரூ 250
போட்டிக்குரிய பகுதி
அயோத்தியா காண்டம் பள்ளிப்படை படலத்தில் 22 பாடல்கள்
மைஅறு மனத்து என்று தொடங்கும் பாடல் முதல் தூய வாசகம் சொன்ன என்று தொடங்கும் பாடல் முடிய
—————————————————————-
கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி -2
6,7,8 ஆகிய வகுப்புகளிலபயிலும் மாணாக்க மாணக்கியர்களுக்கானது.
முதற்பரிசு ரூ1000
ஊக்கப்பரிசு – போட்டியில் பங்கேற்போரில் ஐவருக்கு ஒருவர் என ஒவ்வொரு வருக்கும் 250 ரூபாய்
மனப்பாடப்பகுதி
திருஅவதாரப்படலத்தில் 22 பாடல்கள்
மாமணி மண்டபம் மன்னி என்று தொடங்கும் பாடல் முதல் எந்தை நின் அ்ருளினால் என்று தொடங்கும் பாடல் வரை.
——————————————————-
குறிப்பு
1. பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் இருவர் மட்டுமே உரிய அனுமதியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
2. மனப்பாடப்பகுதி வேண்டுவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்க.
கம்பன் கழகம்
சாயி 1. ஈ செட்டிநாடுடவர்ஸ்,
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
—————————————————–
பிற தொடர்பிற்கு
9445022137
———————————————
கம்பராமாயணப் பேச்சுப் போட்டிகள்
தமிழக அனைத்துக் கலை அறிவியல் , பொறியியல், தொழில் நுட்ப கல்வியியல் கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி – 2016-17
போட்டி நடக்கும் நாள் – 28-1-2016
இடம் – காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு
போட்டி -1 கம்பராமாயணப் பேச்சுப் போட்டி
காலை 10 மணி முதல்
முதற்பரிசு ரூ 3500
பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள அவரின் தாயார் வேம்பு அம்மாள் நினைவுப் பரிசு
இரண்டாம் பரிசு ரூ 1000
திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு
ஊக்கப்பரிசு ரூ 500 இருவருக்கு
தலைப்பு
1 கம்பனில் மனித நேயம்
2. கம்பனில் மனித உணர்வுகள்
3. கம்பனில் மனித ஆற்றல்
இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்
போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.
சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.
Series Navigationதமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்