காற்று வாங்கப் போகிறார்கள்

 

  • சேயோன் யாழ்வேந்தன்

 

காற்று வாங்கப் போகிறேன் என்றவனிடம்

கிரடிட் அட்டையையும் சிலிண்டர் பதிவேட்டையும்

நினைவூட்டுகிறாள் ஒருத்தி

 

சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க

குழாய்கள் மூலம் வீடுகளுக்கே

ஆக்ஸிஜன் வழங்குவதாக

எதிர்க்கட்சியின் தேர்தல் வாக்குறுதி

 

கொலை மற்றும் தற்கொலை மரணங்களில்

ஆக்ஸிஜன் மாஸ்க்கை அகற்றுவது

முதலிடம் பிடித்ததாக தலைப்புச்செய்தி

 

கான்கிரீட் வனங்களில்

கையில் ஆக்சிஜன் அட்டையுடன்

நெடுமரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன

காற்று வாங்க!

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationகாடு சொல்லும் கதைகள்சிற்பி வடித்த சங்க ஓவியங்கள்