குடும்பம்

 

 

 

வேலிக்குள்ளே இரு

வெள்ளைப் பூனைகள்

 

காலை மணி 8

 

கருப்புச்சட்டையில்

வருகிறான் ஒருவன்

குதித்தெழுந்த  பூனைகள்

முதுகுயர்த்தி வால் நிமிர்த்தி

மியாவ் என்றன

 

வந்தவன் கையில் பூனைஉணவு

உண்டன பூனைகள்

 

அடுத்த நாள்

வெள்ளைச்சட்டையில் அவன்

குதித்தெழுந்து முதுகுயர்த்தி

வால் நிமிர்த்தி மியாவ் என்றன

பின் உண்டன

 

இப்படியே தினமும்

 

‘பூனைகளை ஏமாற்றக்கூடாது’

அறிவான் அவன்

‘அவன் ஏமாற்றமாட்டான்’

அறிந்தன பூனைகள்

 

இந்த

எண்ணங்களும் எதிர்பார்ப்புமே

குடும்பங்களின் குறுத்து வேர்கள்

 

அமீதாம்மாள்

 

Series Navigationதாயகக் கனவுடன்…உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022