கூறுகெட்ட நாய்கள்

Spread the love

எஸ். ஆல்பர்ட் 

கீற்றுக்கூரை  பிய்த்துக் கொண்டு ஓன்று வேறாக
காற்றிலசைய , கரிய குழலாட, அதுகண்டு
வெறிநாய் ஒரு நொடியில்  தூர்ந்த  ஒலியாக
நிசப்தம் குலைய , தொடர்ந்தன  ஓன்று பலவாக
பற்றிப் படரும் தீயாக வேலையற்ற நாய்கள்,
விழித்திருக்கும் வீட்டு நாய்கள், உறங்கமுடியாச் சொறிநாய்கள்,
வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு பேதம் கெட்டுச்
சேர்ந்து குரைக்கக் குரைக்க, சத்த பிரம்மமாக
ஊர் நாசமானது. இரவு கெட்டது.
மஞ்ச மாளிகை மஞ்சமும் நாற்காலியும் ஆளின்றி அதிர்ந்தன.
“சனியன்கள் ” தூக்கம் “போச்”சென்று, கழன்று போன
மானங் கைப்பற்றி, பெண்டுகள் பின்னடுங்க
கதவுப் பக்கம் தவிர்த்து , ஜன்னல் வழியாக
உற்றுப் பார்க்க இருட்டு, தெருவிளக்கு எங்கே?
ஊராட்சியாம்  ஊராட்சி, வேலை என்ன வேலை ?
திருட்டுப் பயல்கள் நடமாட்டமோ ? எமனோ ?
எருமைக் கடா ! பாசம் கையில் கட்டிக் கொண்டு போக !
பலவீனம் பயமானது …..நரக ஓலம் ….தர்மராஜா !
நாயக்கண்ணுக்குத்த்  தானாம், நமக்குக் கிடையாதாம்
அத்தனையுமா  ஓன்று சேர்ந்து கொல்லும்?

———–

Series Navigationதொடுவானம் 218. தங்கைக்காகஉயிரைக் கழுவ