Delmore Schwartz தமிழில் : எஸ். ஆல்பர்ட் ஒரு ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல் ஐஸ்க்ரீம் பார்லரில் , சாக்லேட் கேண்டி , பனானா ஸ்ப்ளிட் எதுவேண்டும் உனக்கென்று , எரேமியாவைக் கேட்டபோது பளீரென்று வந்தது பதில். யோசிப்பதற்கென்ன, பெருந்தனக்காரன், சுத்தமான அமெரிக்கன். தொடங்கிய வழியிலேயே தொடர்ந்து செல்லும் தீர்மானம் . அறிஞர் கியர்க்க கார்டு, அவரன்ன பிற ஐரோப்பியர்க்கெல்லாம் தோன்றிய ‘இதுவா அல்லது அதுவா ‘ என்னும் மனித இருப்பின் ஐயத்துக்கு இடம் தராது, மாறி […]
அ.டெல்பின் கனவுகளுக் கிடையில் என் காலங்கள் கசக்கப்பட்டு விட்டன. மடிப்புகளின் ஓரத்தில் மின்னலாய் நினைவுகள் வருவதும் போவதுமாய்…. உலகத்தின் ஓட்டத்தில் இறுக்கப் படுகின்றேன், இன்னமும் மையத்தை நோக்கி முடிவுகள் நீள்கின்றன. விரிவதற்கு இடமில்லா நிலையில் குப்பையிலா வீழ்ச்சி?
கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும் திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின் எதிரொலிகளாய் சில குரல்கள் திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே….. போகுமாறும் சேருமிடமும் தெரிந்து ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு கிளைபிரியும் பாதைகள் _ அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அஃறிணை உயர்திணைகள்_ அசுர, தேவ கணங்கள் அர்த்தனர்த்தங்கள்_ அதிரூப நர்த்தனங்கள் ஆவென்று வாய்பிளந்திருக்கும் அதலபாதாளங்கள் ’வா, சற்றே உட்கார்ந்து இளைப்பாறு’ என்று அன்போடு அழைக்கும் சுமைதாங்கிக்கற்கள் அத்தனையும் அத்துப்படி. அகவொளியில் துலங்குமொரு வரைபடம் […]
அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள், குறும்படங்கள் தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுத் திரைப்பட ரசிகர்கள் ‘Still’ என்ற சொல் உணர்த்தும் பொருளை புரிந்துகொள்வார்கள் என்பதைக் காட்டிலும் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைத்திருக்கலாம். இராவணன் சிறை எடுத்ததாகக் கூட இருக்கட்டுமே அவள் எப்பவும் எனக்கு சீதைதான், எனக்கூறி இராமன் […]
பாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான். அவன் இந்தச் செய்தியைச் சொல்லி இரண்டுநாட்கள் இருக்கும், பாபுவின் தாயார் சிட்னியிலிருந்து முகுந்தனிற்கு ரெலிபோன் செய்தார். “தம்பி… வாறகிழமை […]
இரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். ஒன்னும் புரியல சார். […]
முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு அமீதாம்மாள்
சு. இராமகோபால் சாதாரணமான அவனுடன் பேச்சு அறுபட்டுவிட்டது அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கல்லூரி விடுதியில் நடந்தது அறுபட்டது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது எனக்குக் கோபம் வந்தது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது சின்னஞ்சிறுசுகளாகத் தொடங்கியபோது வகுப்பில் நின்று வாத்தியாருக்கு விரலைக் காட்டுவோம் மணியடிக்குமுன் வெளியே போக ஒண்ணுக்குப் போக எல்லோரும் ஆள்காட்டி விரலைக் காட்டுவார்கள் இவன் தன்நடுவிரலைக் காட்டியவன்போல் சந்தேகம் எழுகிறது நடுவிரல் எனக்கு அறிமுகமானது அமெரிக்கா வந்து சில ஆண்டுகளுக்குப் பின்தான் இப்பொழுதெல்லாம் […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தி இமிடேசன் கேம் (The Immitation Game) என்ற இந்தத் திரைப்படம், ஒரு உண்மை வரலாற்றுக் கதையை அடிப்படையாய்க் கொண்ட அறிவியல் கதை ஆகும். எனவே என் விமர்சனத்தை தொடங்குவதற்கு முன்னால், அந்த உலக வரலாறு குறித்தும், அந்த கணினி அறிவியல் குறித்தும் நான் இங்கே எழுத வேண்டியதாய் இருக்கிறது. 1939-இல், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய நேரம் அது. ஹிட்லரின் ஜெர்மன் கப்பல் படைகள், தங்கள் புத்தி கூர்மையான […]
வித்யாசாகர் காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..? யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி என்று வலிக்கிறது மனசு., எல்லாம் பொய்யிங்கே; அன்பு பொய் அறம் என்று கத்துவது பொய் அழகு கூட மெய்யில்லை, எல்லாமே அப்படித் […]