கையறு சாட்சிகள்

 

சத்யானந்தன்

 

உயர்ந்த கட்டிடங்கள்

மெலிந்த கைகளால்

எழுப்பப் படவில்லை?

 

பலமாடிகள்

கடக்கும் தசை வலிமை

தேவையில்லை

 

மின் தூக்கி எண்

வழி தளங்களுக்கு

இட்டுச் செல்லும்

 

 

மின் தூக்கியில்

முன்னே நுழைந்தது யார்

என்பது அற்ப நிகழ்ச்சி

 

அது அதிகம் நிற்கும்

இடம் அதிகார

மையம்

 

அசுர வளாகங்களை

மின் தூக்கியின் எண் பலகை

இயக்கும்

 

தளங்களில் அறைகளில்

கணினி விசைப் பலகைகள்

வணிக – அதிகார – சூழ்ச்சி மூளையாய்

இயக்கும் தடுக்கும் உயர்த்தும்

அழிக்கும்

 

கடிகாரமும் நாட்காட்டியும்

கையறு சாட்சிகளாய்

Series Navigation