கையோடு களிமண்..!

பொம்மை முடித்ததும்
மீதம் களிமண்..
தலைக்குள்….!
————————————–
களிமண் நிலம்..
புதையலானது..
குயவனுக்கு….!
—————————————
தோண்டத் தோண்ட
தீரவேயில்லை….
களிமண்..!
—————————————-
களிமண்ணும் நீரும்.
குயவன் கைகளின்
அட்சயபாத்திரம்…!
——————————————
களிமண்ணும்..
சக்கரமும்..
குயவனானான் ..
பிரம்மன்..!
——————————————–
சுட்டதில்
எந்தப் பானை..
நல்லப் பானை..!
———————————————-
மண் ஒன்றுதான்..
வடிவங்கள் மட்டும்..
வேறு வேறு..!
———————————————-
குயவன் செய்த
பானைகள்….
அனைத்தும்
காலி தான்..!
————————————————–
குயவனின்
பொன்னாடை…
களிமண்ணாடை..!
——————————————————
நினைத்ததைச்
முடிப்பவன்…
குயவன்..!
———————————————————
நெஞ்சின் உறுதி
மண்ணில்
தெரியும்…!

———————————————————-
ஒரே இடத்தில்
குயவன்..
பானைகளோ..
ஊர்முழுதும்
உலா வரும்..!
———————————————————–
உலகத்தை..
சக்கரமாய்
சுற்றிப் பார்ப்பான்..
குயவன்..!
—————————————————————–
கால்களும்.. கைகளும்..
மின்சாரம் வேண்டாத
இயந்திரம்….
குயவனுக்கு..!
—————————————————————
பிரம்மன் மீதத்தை
தலைக்குள் திணித்ததால்..
அதுவே மூலதனம்..!
————————————————————————
புண்ணிய
படைப்புகள்..
கொலுவிலேறும்..
களிமண் பொம்மைகள்..!
——————————————————————–
இணைத்துப்
பிரித்தாலும்
சுமக்கும்…
பானை..!
———————————————————————-
ஆண்டவனை
வார்க்கும்..
பிரம்மாக்கள்…!
————————————————————————
நான்குகால்..
சிலந்தியாய்…
குயவன்…!
(பொறுமையும்..விடாமுயற்சியும்..)
————————————————————————–
மண்ணிருக்கும்வரை…
மரணமில்லை…
குயவனுக்கு..!
————————————————————————-
சக்கரத்தில் ..
சுழன்று
உருவாவதால்…
களிமண்ணும்
ஞானி தான்..!
—————————————————————————

Series Navigationமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?ஆலிங்கனம்