கோவா தேங்காய் கேக்


நேரம் 2 மணி நேரம்

Ingredients
தேவையான பொருட்கள்
4 கப் செமோலினா (ரவை)
1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
1/4 தேக்கரண்டி உப்பு
2 1/2 கோப்பை சர்க்கரை மாவு( சர்க்கரையை மாவாக அரைத்தது)
1/4 கோப்பை தேங்காய் எண்ணெய்
8 மேஜைக்கரண்டி வெண்ணெய்.
4 முட்டைகள்
400 மில்லிலிட்டர் தேங்காய் பால் (ஒரு கேன்)
1/4 கோப்பை தேங்காய் க்ரீம்
1 1/2 ரோஸ்வாட்டர்
1 கோப்பை தேங்காய் துருவல்

செய்முறை
8இன்ஞ் X 8 இஞ்ச் கேக் பாத்திரத்தில் ஒரு பார்ச்மண்ட் பேப்பரை போட்டு அதில் வெண்ணெயை தடவி தனியே வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் செமோலினா மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். இன்னொரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய் எண்ணெய், வெண்ணை ஆகியவற்றை கலந்து கை மிக்ஸர் மூலம் கலக்கி பொலபொல என்று வரும் வரை கலக்கவும். மூன்று நிமிடங்கள். இத்துடன் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். பிறகு பாதி தேங்காய் பாலையும் தேங்காய் கிரீமையும் சேர்த்து கலக்கவும். இத்துடன் ரோஸ் வாட்டரையும் சேர்க்கவும். இத்துடன் மாவு உப்பு கலவையையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் தேங்காய் துருவலை சேர்த்து வைத்திருக்கும் கேக் பாத்திரத்தில் ஊற்றி சமமாக்கி இதனை ரிஃபிரிஜிரேட்டரில் இரவு முழுவதும் வைக்கவும்.
அடுத்த நாள் எடுத்து, ஓவனில் 350 பாரன்ஹீட் வெப்பத்தில் இந்த கேக்கை வைத்து 90 நிமிடங்கள் வேக விடவும். நடுவே எடுத்து திருப்பி போட வேண்டும்.
வெளியே எடுத்துமுழுவதும் குளிர்ந்தவுடன் பரிமாறலாம்.

Series Navigationமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் சோஸ்டர் ( Herpes Zoster )