சந்திப்பு

 

சாதாரணமாக துவங்கிய ஒரு நாளின் பகல் பொழுதில் 

அலுவலக சிற்றுண்டி சாலையில் கல்லூரி கால

நண்பனை 15 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்தேன்

சிரிக்க சிரிக்க பேசினோம்

கடற்கரைக்குப் போவது என்று முடிவானது

தத்தம் மனைவிக்கு அலைபேசியில் அழைத்து இரவு சாப்பாடு

வெளியில் என்றும் தாமதமாக வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தோம்

குழந்தை, குடும்பம், வேலை, கல்லூரி ஆசிரியர் ராமசாமி,

கல்லூரி கால நண்பர்கள் சத்திய நாரயணன், அருண்குமார், கருப்பையா,

நண்பிகள் பற்றிய சுவாரசியங்கள் எல்லாம் பேசினோம்

பேச்சு நிகழ் காலத்துக்கு திரும்பியது

அலைபேசி மாடல், வீட்டு லோன், பள்ளி கூட அட்மிசன்

எல்லாம் பேசி ஆகி விட்டது

சிறிது நேரம் கடலை அமைதியாக வேடிக்கை பார்த்தோம்

இரவு சாப்பாட்டு நேரம் வரை பேச ஒன்றும் இல்லை என்றானது

வீட்டுக்கு கிளம்பினோம்

நண்பன் தந்த்துவிட்டு சென்ற அலைபேசிக்கு

இன்றாவது அலைத்துவிட வேண்டும்.

Series Navigationஈழம் கவிதைகள் (மே 18)கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)