சாகித்ய அகாதமி : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி

This entry is part 9 of 16 in the series 20 செப்டம்பர் 2015

சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் ஜோதி சாகித்ய அகாதமியின் செயல்பாடுகள், தோற்றம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

பேராசிரியர் கெங்கமுத்து கலந்து கொண்ட 3 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.

உரையாளர்கள்:’

* சுப்ரபாரதிமணியன் – (நாவல் பார்வை )

* குழந்தைவேலு ( சிறுகதைப் பார்வை )

* தாண்டவக்கோன் ( ஊடகப் பார்வையில் படைப்பிலக்கியம் ) பற்றிப் பேசினர்.

தமிழ்த்துறைத்தலைவர் நா.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். ஏவிபி கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியை மஞ்சுளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர்கள் செந்தமிழ் வாணன், முடியரசு, பின்னல் சவுந்திரபாண்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சாகித்ய அகாதமியின் சென்னை அலுவலகம் இந்நிகழ்ச்சியை நடத்தியது.

சிலரின் உரை:

சுப்ரபாரதிமணியன்: தமிழ் நாவலுக்கு 130 வயதாகிறது கவிதை, பாடல் என்றிருந்த தமிழ் இலக்கியக் போக்கு மேற்கத்திய இலக்கியங்களின் பாதிப்பில் நாவல் வடிவத்தை எடுத்தது. சுதந்திர எழுச்சி வேண்டிய நாவல்கள், திராவிட பகுத்தறிவு கருத்து நாவல்கள், யதார்த்த நாவல்கள்., நவீனத்துவ நாவல்கள் என்று வளர்ந்து இன்று இந்திய இலக்கியத்தின் முக்கிய பகுதியாக தமிழ் நாவல் விளங்குகிறது. விளிம்புநிலைமக்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் இன்றைய நாவல்கள் விளங்குவது சிறம்பம்சமாகும்.. அதில் கொங்கு நாவல்களின் பங்கு உலகமயமாக்கலில் பாதிக்கப்பட்ட, நுகர்வு சார்ந்த மக்களின் வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதல் இன்றைய நவீன நாவல்கள் வரை மக்களின் குரலாக தமிழ் நாவல் இடம் பிடித்திருக்கிறது.

தாண்டவக்கோன்: ஊடகம் காட்சி வடிவத்தில் நாவலை சரியாகவே உள்வாங்கக் கூடியதாகும். நல்ல நாவல்கள் நல்ல திரைப்படங்களாயிருகிற போக்கு தமிழில் சமீபத்தில் தென்படுவது ஆரோக்கியமானது. இளைஞர்கள் திரைப்பட, குறும்பட துறைகளில் அக்கறை கொள்ள படைப்பிலக்கியம் ஊன்று கோலாக அமையும். நல்ல இலக்கியப் படைப்புகளே நல்ல திரைப்படங்களுக்கு முன்னோடியாகும்.

Series Navigationஅரிமா விருதுகள் 2015பணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *