சாபக்கற்கள்

வைகை அனிஷ்
சாமி வரம் கொடுத்தாலும் ப+சாரி வரம் கொடுக்கமாட்டார் என்பது பழமொழி. அவ்வகையில் வரம் கொடுத்த சாமியே சாபம் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இச்சாபம் இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் இன்று வரை நிகழ்ந்து வருகிறது.
ஒரு நாட்டின் வரலாற்றை முழுமையாக உருவாக்குவதற்குத் தக்க சான்றுகளாகத் திகழ்பவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, இலக்கியம், அரசு ஆவணம், பதக்கம், நாணயம், வெளிநாட்டார் குறிப்பு ஆகியவைகளேயாகும்.
இஸ்லாமிய பெருமக்கள் இந்துக்களையும், இந்துக் கோயில்களையும், இந்துமடங்களையும், இந்துப் பெருமக்கள் இஸ்லாமிய பெருமக்களையும், பள்ளிவாசல், தர்காக்களையும் பெருமையுடனே மதித்துப் போற்றிக் கொடைகள் கொடுத்துப் புரவலர்களாக விளங்கிய செய்திகள் தமிழ்நாட்டில் பன்னெடுங்கால ஆவணங்களில் பரவலாக கிடைக்கின்றன.
பண்டைய காலத்தில் நமது நாட்டை மன்னர்கள், ஜமீன்கள், அரசர்கள், நவாப்புகள், என பல்வேறு தரப்பினர் ஆண்டனர். அவர்கள் ஆண்டபோது அரசு ஆணையை இன்றைய கால கட்டங்கள் போல கணிப்பொறி, பேனா போன்றவை அக்காலத்தில் இல்லை. இதற்காக கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள் (கைபீது எனும் சொல் பாரசீக சொல்லாகும். ச+ழ்நிலைகள், குறிப்புகள், தொடர்புகள் என பொருள்படும்)ஓவியங்கள், பாறை ஓவியங்கள் மூலமே வெளிப்படுத்தினர். அதனை அக்காலத்தில் மதித்துப்போற்றி அந்த ஆணையின்படி நடந்தனர். இவையல்லாமல் பொதுப்பணிகளாக ஏரி, குளம், வாய்க்கால், மடை, மதகு, கலிங்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். அதிலும் மீன்பிடி உரிமை, தண்ணீர் பாய்ச்சுதலில் பங்கு போன்றவற்றையும், கோயில்கள், தேவாலயங்கள், மச+திகளுக்கு தானமாக நிலம் மற்றும் சிலவற்றை கொடுத்தனர். அதற்கு ஆவணமாக கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும், கைபீதுகளையும், ஓலைச்சுவடிகளையும் வைத்திருந்தனர். அதற்கு சாட்சியாக கையெழுத்தும் இட்டனர். இவ்வாறாக வரமாக கொடுத்த கொடைகளை பற்றி கல்வெட்டுக்களில் பொறித்து இறுதியில்  சாபம் விடும் விதமாக மக்களை அச்சுறுத்தினார்கள்.
தற்பொழுது கிராமங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால் மண்ணை வாறித்தூற்றுதல், கொல்லையில போக, பேதியில போக, காலராவுல போக என்று ஒருவருக்கொருவர் வசைபாடுவதை பலர் சாபமிடுவதையும் கண்ணால் காண்கிறோம். இதே போல பண்டைய காலத்தில் அரசர்கள் முதல் ஆண்டிவரை நிலம் மற்றும் கொடைகளை பற்றி குறிப்பு எழுதி இறுதியில் உறுதியான சாபத்தை விட்டனர். அவ்வாறு சாபமிட்டவர்களில் மாமல்லபுரம் சோழர்கால கல்வெட்டுக்கள், பாண்டிய நாட்டு மன்னர்கள் கல்வெட்டுக்கள், திருமலைநாயக்கர் கால செப்பேடுகள் என பல உள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்ட நிலங்கள், குளத்தில் மீன்பிடி உரிமைகள் பற்றிய கல்வெட்டுக்கள் பல மறைக்கப்பட்டும், சில திட்டமிட்டும் உடைக்கப்பட்டும், சில அழிக்கப்பட்டும் வருகிறது.
நாகை மாவட்ட கல்வெட்டுக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூருக்கு சென்றபோது நாகூரில் இருந்து 1 கி.மீ.தொலைவில் பாழடைந்த நிலையில் சாலையோரத்தில் உள்ள கட்டிடத்தில் ஒரு கல்வெட்டு என்னுடைய கண்ணுக்கு எட்டியது. அந்த கல்வெட்டின் விபரம்
காலம்-9.12.1812
செய்தி: நாகூர் நூர்முகமது மரைக்காயர் மகன் முகமது அலி மரைக்காயர் பொதுமக்கள் உபயோகத்திற்காக குளம், தெருவாசல், தோட்டம், வீடு, கடை ஆகியவைகளைக் கொடையாகக் கொடுத்தார். மக்கள் ~சத்திரம்~ என்று அழைக்கின்றனர். இதற்கு உதவி செய்பவர்கள் அல்லாவுடைய றெகுமத்துக்குப் பெறுவார்கள் தீமை செய்வோர் அல்லாவுடைய முனிவில் அகப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இன்று அழிந்த நிலையில் சத்திரம் உள்ளது.
கல்வெட்டு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹிம் என்று அரபி மொழியில் துவங்குகிறது.
1.கிசுறத்து 1227 வருஷம் ஏமல்ஃ2.ஆங்கிலா வருஷம் கார்த்திகை மாதம் 26 தேதிஃ3.னாகூரிலிருக்கும்
4.நூறு முகம்மது மரைக்காயர்ஃ5.குமரர் முகமது அலி மரைக்காயர்ஃ6.அல்லவுக்காக வெகு ச
7.னங்களுக்கு உதவும்ஃ8.படியாகச் செய்துவைத்தஃ9.குளம் திருவாசல் தோட்டம்ஃ10.வீடு கடைத் திருப்பணி அடங்ஃ11.கலும் தறுமம் பண்ணினதுக்குஃ12.யெல்லை ராசவீதிகி மேற்க்கத்ய கீஃ13.ள்புறம் தெற்கு வடக்கு சாதிஃ14.அடி 194 மேல்தலை சாஃ15.தி அடி 206 கிளக்கு மேற்க்ஃ16.கு சாதி அடி 295 யிதே
17.சாற்ந்த தாராசம் தெற்க்ஃ18.கு வடக்கு சாதி அடி 15 கிஃ19.ளக்கு மேற்க்கு சாதி அடி
20.72 இதுகள் அடக்கலுஃ21.ம் தற்ம்மத்துக்கு விட்டபடிஃ22.யினாலே யெந்தக் காலத்
23.திலேயும் யிதுக்கு உதவிஃ24.யாக யிருக்குற பேர்கள்ஃ25.யெல்லாம் அல்லாவுஃ
26.டைய றெகுமத்துக்குப் பெஃ27.முகாந்திரத்திலே விகர்தஃ29.ம் நினைக்குற பேர்கள் யெ
30.ல்லாம் அல்லாவுடைஃ31.ஸ்லாம் அல்லாவுடைஃ32.ய முனிவில் அகப்படுஃ33.வார்கள்
என அக்கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.
புகைப்படம் உள்ளது
……………………….
2.விசயராகவ நாயக்கர் கொடை
இடம்:நாகூர் தர்கா உள் மினார்
காலம்:தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674)
காலம் பார்த்திப ஆடி15: கி.பி.3.7.1645
செய்தி:தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார். அக்கட்டிடத்திற்கு தீங்கு விளைவித்தால் மக்கத்து பள்ளிக்கு பாவம் செய்தவராகவும், இந்துக்களாக இருந்தால் கங்கை கரையினில் காராம் பசுவைக்கொன்ற பாவத்திற்கு ஆளானவர் என்;று சாபமிட்டுள்ளது.
கல்வெட்டு
1.பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுகஃ2.நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான
3.மதாறு ராவுத்தர் நாவ+ர் மீரா ராவுத்தர் முதஃ4.ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த
5.ம்மத்துக்கு அகுதம் பஃ6.மக்கத்திலே அகுதம் பஃ7.ண்ணின பாவத்திலேஃ8.போக கடவாராகவும்
9.கெங்கைக் கரையில் காராஃ10.ன் பசுவை கொன்ற பாஃ11.வத்திலே போககடவாராகவும்
புகைப்படம் உள்ளது
திண்டுக்கல் மாவட்ட கல்வெட்டு
ஆணையை மீறக்கூடாது என்பது பற்றிய கல்வெட்டு.
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் உள்ள கல்வெட்டு இரண்டு ஊர்களைச்சேர்ந்தவர்கள் இணக்கமாக வாழவேண்டும் என்றும் மீறினால் அவர்களுக்கு சாபமும் கிடைக்கும் என பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1280 ஆம் ஆண்டைச் சார்ந்த எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு தான்றிக்குடி ஊரார்க்கும் தாண்டிக்குடி அருகிலுள்ள மணலூர் ஊரார்க்கும் இடையே பகை நிலவிவந்தது என்றும் அதனை இருவரும் பேசி தீர்த்துக் கொள்வது என்றும் முடிவெடுத்து அம்முடிவினைக் கல்வெட்டாகப் பொறித்ததை தெரிவிக்கிறது. இவ்விரண்டு ஊரவர்கள் சொல்ல  இக்கல்வெட்டை வெட்டியவன் மயிந்திரமங்கலத்திலுள்ள கல்தச்சன் வல்லாளப் பெருமாள் உய்யன் ஆவான். இதனை இருவரும் மீறக்கூடாது என்றும் மீறினவர் தங்கள் தாய்க்கு தாங்களே கணவன் ஆகும் கொடுமைக்கு ஆளானவர் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.
புகைப்படம் உள்ளது
மாமல்லபுரக்கல்வெட்டுக்கள்
இராமானுஜ மண்டபம்
மகாபலிபுரத்தில் மஹிஷாசரமர்த்தினி குகையிலிருந்து கலங்கரை விளக்கம் இருக்கும் திசையில் ஒருசிறுவழி செல்கிறது. அதிலே இறங்கிச் சென்றால் இராமானுஜ மண்டபத்தை அடையலாம். இம் மண்டபத்தின் முகப்பில் இரண்டு தூண்கள் இருக்கின்றன. தூண்களினடியில் சிம்மங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்குமிடையேயுள்ள நிலப்பகுதி உருத்திரனின் புகழ்பாடும் கல்வெட்டு ஒன்று அழகிய பல்லவக் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் வடமொழியில் பல்லவகிரந்த எழுத்துக்களில் முதலாம் பரமேச்சுரவர்மன் காலத்திய (கி.பி.671-700) கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தமிழாக்கம்:
1.திக்தேஷாம் திக்தேஷாம் புணரப்பி திக்திகஸ்து
திக்தேஸ்ஸாம்
2.ஏஸாண வசதிக்ருதயே குபதகதி
3.விமோட்சஹோருத்ரஹ
விளக்கம்:
தீயவழியில் ஒழுகாமல் தடுக்கிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனமுடையவர்கள் மூன்று மூன்று முறை சபிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்.
குன்றத்தூர் கல்வெட்டு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள பாலறாவாயர் திருக்குளம், நிழல் தரும் மற்றும் பயன்தரும்மரங்களுடன் கூடிய கரையுடனும், 6 படித்துறைகள் இருக்கும்படியாகவும், குளத்தில் நீர் குறைந்தால் நிரப்பவும், நீர் மிகுதியானால் நீர்; வடியவும் வசதியாக வாய்க்கால்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குளத்தின் தூய்மையினை பாதுகாக்க அச்சுதக் களப்பிராயன் என்பவர் ஆணைப்படி வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று இக்குளத்தின் கிகை;கு பகுதியில் இன்றும் உள்ளது. இதில் உள்ள செய்தி யாதெனில் இப்பாலறாவர் குளக்கரையில் மண் எடுத்தவனும், மண் எடுக்கச் சொன்னவனும், இரைத்தவனும், நீர் இரைக்கச்சொன்னவனும் கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்று போட்ட பாவத்தில் போகக்கடவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் சமணர் கோயில்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் கருப்பணசாமி கோயில் ஒன்று உள்ளது. அக்கோயில் அமைந்துள்ள பகுதி அருகே மொட்டை மலை என்ற மலை உள்ளது. அம்மலையில் உள்ள கோயில் பகுதியில் சமணத்துறவிகள் அச்சநந்தி என்ற துறவி தலைமையில் ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர். அப்போது உத்தமபாளையத்திற்கு சமணத்துறவிகள் இட்டபெயர் திருப்புனகிரி. இந்தப்பகுதியில் குடியேறிய சமணத்துறவிகள் இப்பகுதியை சமணப்பள்ளியாகவே மாற்றினார்கள். இ;ப்பகுதியில் உள்ள மலையை குடைந்து சுத்தநீருக்கு சுணைகளை உருவாக்கி இங்கேயே குடிஅமர்ந்தனர். அதன் பின்னர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆகாரதானம்(உணவு), அவுசத்தானம்(மருத்துவம்), அட்சரதானம்(கல்வி), அவையதானம்(அடைக்கலம் தருதல்;) ஆகியற்றை போதித்தனர். இங்குள்ள பாறை சிற்பங்களில் கனகநந்தி, அரிட்டனேமி என்ற பெயரும் 23ம் தீர்த்தங்கரர் பார்சுவநாதர், 24ம் தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சேர நாட்டையும், பாண்டிய நாட்டையும் இணைக்கும் வணிக பெருவழியாக உத்தமபாளையம் திகழ்ந்துள்ளது.
புகைப்படம் உள்ளது
நடுகற்கள்
~ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தால் எத்தகு புண்ணியம் கிடைக்குமோ அத்தகு புண்ணியம் போரில் இறக்கும் வீரனுக்குக் கிடைக்கும்~ என்று ரிக்வேதமும் அதர்வண வேதமும் கூறுகின்றன.(ர்ளைவழசல ழக னூயசஅய ளயளவசய மழட ஐஐஐ p58). ;இந்தியாவில் தமிழ் மக்கள் வாழ்வுக்குப் போகாவிட்டாலும் சாவுக்கு செல்லும் வழக்கம் உடையவர்கள். அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நிறுவும் பழக்கமும் இன்று வரை உள்ளது.
பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு நினைவுக்கற்கள் உலகமெங்கும் எடுக்கப்பட்டாலும் போர்களில் மாண்டவர்களுக்கு ஹீரோ ஸ்டோன்ஸ் எடுப்பது சிறப்பாக கருதப்பட்டு வந்துள்ளது. தமிழில் நடுகல் என்பது, வீரகலு அல்லது வீரசிலாலு எனக் கன்னட, தெலுங்கு மொழிகளில் கூறப்பட்டுள்ளது. மேற்கு இந்தியாவில் நினைவுக்கற்களைப் பலியா என்றும், கம்பியா என்றும் அழைக்கின்றனர். மத்திய இந்தியாவில் மாரியர்கள் வழிபடும் நினைவுக்கற்கள் உரஸ்கல் எனவும், வட இந்தியக்கொல்லா மற்றும் போயா இனத்தவர்கள் வீர்கா என்று நடுகல்லை அழைக்கின்றனர். இந்நடுகற்களும் ஓராயிரம் உண்மைகளை கூறிக்கொண்டிருக்கிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள புலிமான்கோம்பை, சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள ப+லாநந்தபுரம், அம்மையநாயக்கனூர் ஆகிய ஊர்களில் இன்றளவும் நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
மீன்பிடி உரிமை, நீர் பாய்;ச்சும் உரிமை, கோயில்களில் திருப்பணிகள், கோயில்களில் உள்ள விளக்குகளில் திரிஏற்றுதல் என பலவற்றிலும் கல்வெட்டுக்கள் இருந்தன.தற்பொழுது வரமாகக் கொடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் சாபக்கற்களாக காட்சியளித்தாலும், அக்கற்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்து வரலாற்றை மறைத்து வருகிறோம் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

Series Navigationஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]ஒரு செய்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்