சாமானியனின் கூச்சல்

Spread the love

நேதாஜிதாசன்

திராவிட கூச்சல் இன்னமும் கேட்டுகொண்டிருந்தது
சத்தம் போடாதே என அதட்டியது காவி கூச்சல்
எதை எரிக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது சாதி கூச்சல்
யாரை விமர்சிக்க என சலித்துக்கொண்டிருந்தது இலக்கிய கூச்சல்
எதை திருட என யோசித்து கொண்டிருந்தது அதிகார கூச்சல்
யாரிடம் இருந்து பிடுங்க என அலைந்து கொண்டிருந்தது காக்கி கூச்சல்
எங்கு ஒட்ட என இடம் தேடிக்கொண்டிருந்தது ஆளுங்கட்சியின் கூச்சல்
எங்கு போக என திட்டமிட்டுகொண்டிருந்தது டீ விற்றவரின் கூச்சல்
இதில் கேட்கவா போகிறது இந்த சாமானியனின் கூச்சல்

Series Navigationடி.கே.துரைசாமியை படியுங்கள் !பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது