சிதறல்

Spread the love
 

தேடுதல் எளிதாக இல்லை 

தொலைத்த நானும்

தொலைந்து போன நீயும்

தனித் தனியாக தேடும் பொழுது

எட்டநின்று பார்த்தது

காதல் ….

களித்த காலம் கழிந்து போனதில்

எச்ச விகுதிகளில் தொக்கி

நிற்கிறது காலம்

மற்றும் நான்

தூர்ந்து போன கனவுகள்

இன்று

சக்கரை பூச்சுடன்

தொலைந்து போன புன்னகை

உதட்டளவில் பூக்கின்றது

சிதறிப் போன கண்ணாடி கனவுகளில்

யாருக்கும் காயம் இல்லை

உடலளவில் ….
 

Series Navigationகூடடையும் பறவைபுழுங்கும் மௌனம்