சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.

சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள்
பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளாம். கட்டணமில்லை. இரண்டு நாட்களும் தாங்கும் செலவு மற்றும் மதிய உணவு ஏற்பாடும் செய்து தரப்படும். ஒரே நிபந்தனை பயிற்சி முடிந்தபின்னர் விமர்சனம் எழுத வேண்டும். தமிழ் ஸ்டுடியோவில் இருந்து புதிதாக “விமர்சகன்” என்றொரு மாத இதழ் வெளிவரவிருக்கிறது. முழுக்க முழுக்க சினிமா விமர்சனங்கள் மட்டுமே இதில் வெளிவரும். பயிற்சியை முடிப்பவர்கள் இந்த இதழில் தொடர்ந்து எழுத வேண்டும். பயிற்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமிருக்கும் நண்பர்கள் உடனே உங்கள் பெயரை முன்பதிவு செய்த்த்துக்கொள்ளுங்கள். பயிற்சி விரைவில் சென்னையில் நடைபெறும்.

முன்பதிவுக்கு: 9566266036, 044 42164630

Series Navigation“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்