சுத்த மோசம்.

“எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ்.
“அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா.
“என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ்  அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு சினிமா ஸ்டில்லைப் பார்த்து.
“ ம்.. என்ன ப்ரயோஜனம். அடுத்தவங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிட்டு..” நொடித்தாள் ரேஷ்மா..
“எவ்வளவு முடி.. அழகான முகம் இல்ல..” ரசித்தான் ரமேஷ் ஒரு சினிமா விமர்சனம் பார்த்து.
“ கட்டிக்கப்போறேன்னு சொல்ற பையனோட அப்பா நடிகரோட இவ நடிக்கிறா..” பல்கடித்தாள் ரேஷ்மா..
‘நடிப்புத்தானே’ என சொல்ல நினைத்து மௌனமானான் ரமேஷ்.
அடுத்த பக்கம் இருந்த இன்னொரு சினிமா விமர்சனம் பார்த்து ரேஷ்மா சொன்னாள்., “ இவன் டிஃபரண்ட் ரோல் நல்லா பண்றான்ல..” என்று.
”இவன் இன்னொரு நடிகனோட சுத்துறானாமில்ல..” என்றவன் மனைவியின் கோபப்பார்வை உணர்ந்து பேச்சை மாற்றினான். “பிரபலமானாலே ப்ராப்ளம்தான். இந்தப்த்ரிக்கைகள் எல்லாம் ஒரே காசிப் ந்யூஸ்தான் சுத்த மோசம்….!”
Series Navigationபூனைகள்வீடழகு