This entry is part 16 of 45 in the series 2 அக்டோபர் 2011

நிலவும் நானும்
கள்ளன் போலீஸ் விளையாடினோம்
நான் போலீசாக
நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும்
நிலவு போலீசாக
நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன்
இப்படி மாறி மாறி
இரவெல்லாம் விளையாட்டு
சூரியன் தன்னையும் விளையாட்டில்
சேர்க்க சொல்லி சண்டையிட
எங்கள் விளையாட்டை கலைத்தோம்
மற்றொரு நாளில்
விளையாடுகையில்
நிலவு மேகத்தில் மறைந்து
போக்கு காட்டியது
அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை
போதும் விளையாட்டு
வெளியே வா என அழைக்க
நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது
நிலவு வடித்த கண்ணீர்
எங்க ஊரு முழுவதும் மழையாக

Series Navigationபிரதியைத் தொலைத்தவன்பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி