சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 6 of 6 in the series 26 டிசம்பர் 2021

 

 

 

அழகியசிங்கர்

 

 

          இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன். 

          பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன். 

          ஜனவரி மூன்றாம் தேதி 1992 ஆம் ஆண்டு க்ரியா வெளியிட்ட புத்தகமான சுரா கதைகளை வாங்கினேன்.  அப்போது அந்தப் புத்தகம் விலை ரு.90.

          என்னிடமிருந்த புத்தகத்தின் முதுகுப் பக்கத்தில் எலி   சற்று பதம் பார்த்து விட்டது.  இத்தனை வருடங்களில் அதன் தாள்கள் உடைந்து விழ ஆரம்பித்து விட்டன.

          சரி, நான் புத்தகத்தில் உள்ள கதைகளை எப்போது எடுத்துப் படித்துப் பார்த்தேன்.  படிக்கலாம் படிக்கலாமென்று வைத்திருந்தேன் தவிர, புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. இன்னும் கேட்டால் அழகாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் சுந்தர ராமசாமி கதைகளும் ஒன்று.

          கதைஞர்கள் கூட்டம் ஆரம்பத்ததிலிருந்து கிடைக்கும் சிறுகதைகள் தொகுப்பெல்லாம் ஒரு மேசை மீது அடுக்கி வைத்திருக்கிறேன்.  நான் இருக்கும் வீட்டில்.

          இன்னும்  திறந்த ஸ்டீல் ராக்  முழுவதும்  சிறுகதைகள் புத்தகங்களாக நிரப்பி இருக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வேண்டும். நான் ஒரு காரணத்தைக் கண்டு பிடித்தேன்.  கதைஞர்களைக் கொண்டாடுவோம்  என்ற காரணம்.  மற்ற நண்பர்களை அழைத்தேன்.  அவர்களுக்கும் படிக்க வேண்டிய கதைகளைக் கொடுத்தேன்.  இந்தக் கூட்டம் நடக்கிற சாக்கில் நானும் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

          இதோ 3 சுந்தர ராமசாமியின் கதைகளைப் படித்து விட்டேன். 92ல் வாங்கிய புத்தகத்திலிருந்து 2021ல் 3 கதைகளைப் படித்தேன்.  அந்நியாயம் என்று எனக்குத் தோன்றியது.  ஆனால் அவர் நாவல்களைப் படித்திருக்கிறேன்.

          பள்ளம் என்ற கதையை 26.06.2019ல் படித்தேன். ஒரு நண்பர் அந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிட்டதால் சுந்தர ராமசாமி கதைகளை எடுத்து அந்தக் கதையை மட்டும் படித்தேன்.

          புத்தகங்களையே படிப்பதில்லையா? அப்படி இல்லை.  அவப்போது அவசரத்தில் பல சிறுகதைகளைப் படிக்கிறேன்.  எனக்குப் புத்தகம் படிக்க ஒரு டிமான்ட் ஏற்பட வேண்டும்.  யாராவது என்னைக்கூப்பிட்டுச் சுந்தர ராமசாமியின் சிறுகதைகளைப் படித்து விட்டு ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள் என்று சொல்ல வேண்டும்.

          நானே படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று நினைக்கும்போது தானாகவே படிக்க வேண்டுமென்ற வேகம் ஏற்படுவதில்லை.  இப்படியே காலம் போய் இந்தப் புத்தகத்தின் தாள்கள் உடைந்து விழும் நிலைக்குப் போய்விட்டது.

          இதோ இந்தக் கதை நிகழ்ச்சிக்காக 3 கதைகளை எல்லோருக்கும் படிக்கக் கொடுத்து நானும் படித்துவிட்டேன். இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட வேண்டும்.  

          கதைகளைப் படித்தால் மட்டும் போதாது, ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.  நான் எத்தனையோ கதைகளைப் படித்துப் படித்து ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். யாராவது உங்களில் எத்தனை கதைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும்.

          உண்மையில் என் ஞாபகசக்தியை அதிகரிக்கச் சுந்தர ராமசாமியில் கதைகளை எடுத்துக்கொண்டேன்.  மனதிற்குள்ளே திரும்பவும் கதைகளைச் சொல்லி  பார்த்துக்கொள்வதுதான்.

          முதன் முயற்சியாக சுந்தர ராமசாமியின் கதைகளாகப் பிரசாதம், சீதை மார்க் சீயக்காய்த்தூள்ரத்னா பாயின் ஆங்கிலம். இன்னொன்று சொல்ல வேண்டும்.  ஏற்கனவே  சுந்தர ராமசாமியின் சில கதைகளைப் படித்திருக்கக் கூடும். உதாரணமாகப் பல்லக்குத் தூக்கிகள், வாசனைரத்னாபாயின் ஆங்கிலம் என்ற கதைகளை முன்பே  படித்திருக்கிறேன்.  ஆனால் முழுத் தொகுப்பும் படிக்க வில்லை ..  பிறகு வழக்கம்போல் எனக்கு ஞாபகமில்லாமல் எல்லாக் கதைகளையும் மறந்து விட்டேன்.

          பொதுவாக நான் படித்த கதைகளைப் புத்தகத்தில் குறித்து வைக்கும் வழக்கமுண்டு.  அதுமாதிரி இப் புத்தகத்தில் நான் குறிப்பிட்டிருக்கவில்லை.  அதனால் சுந்தர ராமசாமியின் வேற சிறுகதைகள் தொகுப்பில் இதைக் குறித்து வைத்திருக்கலாம். அப்போது படித்திருக்கலாம்.  என் கைவசம் அவருடைய வேறு சிறுகதைத் தொகுப்பு இல்லை.

          ஞாபகம் வைத்துக்கொள்ள எதாவது வழி செய்ய வேண்டும் என்று தோன்றியது.  கொரானா மாதிரி அக் கதைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முயலும்போது நாளாவட்டத்தில் உருமாறிப் போய்விடும்.  எனக்கு ஏற்கனவே உருமாறிய அசோகமித்திரனின் ரிக்ஷா கதை ஞாபகத்தில் இருக்கிறது.

          பிரசாதம் என்ற கதையை எடுத்து அலசலாம்.  இந்தக் கதையின் முக்கிய விஷயம்.  7347 என்ற பெயரில் ஒரு போலீசு காரனை கதைசொல்லி  அறிமுகப் படுத்துகிறார்.  கடைசி வரை பெயரையே குறிப்பிடப்படவில்லை.  யாராவது அகப்படுவாரா என்று பார்க்கிறார்.  தப்பு எதாவது தன் முன்னால் மாட்டிக்கொள்வாரா என்று பார்க்கிறார். அதன் மூலம் கிடைக்கும் வசூல் தன் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடப் பயன்படும் என்பதுதான் அவன் திட்டம்.

          எல்லா இடங்களுக்கும் சுற்றிச் சுற்றி வருகிறான் யாரும் கிட்டவில்லை. 

          கைத்தடியைப் பூட்சில் தட்டிக்கொண்டே நின்றான் எழுபத்து மூன்று நாற்பத்தேழு.

டாக்ஸிகாரர்களை எல்லாம் பட்பட்டென்று கைகாட்டி நிறுத்தினார்.  எல்லோரும் ஒழுங்காக லைசன்ஸ் வைத்திருக்கிறார்கள்.

          ஒரு குதிரைக்காரனை மிரட்டி எட்டணா கேட்கிறான். குதிரைக் காரன் வேஷ்டியை உதறி ஒன்றுமில்லை என்கிறான். பெரிய ஏமாற்றம் எழுபத்துமூன்று நாற்பத்தியேழுவிற்கு.

          இவன் கண்ணில் கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர் மாட்டிக்கொண்டு விடுகிறார்..  ஒரு சாதா கவரை கையில் வைத்திருக்கிறார் அர்ச்சகர்.  அர்ச்சகர் கோயில் பக்கத்தில் உள்ள பாக்ஸில் கார்டை போட முயல, அங்கே தபால்கள் அதிகமாக இருந்ததால் போட முடியலை.  

          அவர் கையில் கிடைத்த இரண்டு கவர்களை எடுத்துக்கொண்டு தபாலாபிசுக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்த்த7347க்குக்கொண்டாட்டம்.  தன் பெண்ணிற்குப் பிறந்தநாளைக் கொண்டா

டிலாம் என்று தீர்மானித்தார். அர்ச்சகரை மிரட்டுகிறார். நடப் போலீசு ஸ்டேஷனுக்கு‘ என்கிறார்.  கெஞ்சறார் அர்ச்சகர்.

          இதிலிருந்து தப்பிக்க பத்து ரூபாய் கேட்கிறார்7347 .  ‘நான் எங்கே போவேன் பத்து ரூபாய்க்குஎன்கிறார் அர்ச்சகர்.

          ஒரு கட்டத்தில் அர்ச்சகருக்குப் பயம் இல்லாமல் போய் விடுகிறது. 

          ‘கேசை சரி செய்துவிடுகிறேன் அஞ்சு ரூபாய் எடும்‘ என்கிறார்.வேற வழியில்லாமல்  அர்ச்சகரை விட்டுவிடத் தோன்றியது.   7347க்கு. கேட்கிற எதுவுமே அர்ச்சகரிடமிருந்து பெயரவில்லை.

கையில்வைத்திருந்த லட்டரை போட்டுவிட்டு வர்றேன்‘  என்று தபாலாபிசுக்குப் போகிறார் 7347.  ”பார்த்துப் போடும் யாராவது காக்கிச் சட்டைக்காரன் வந்து புடிச்சுக்கப்போறான்”  என்கிறார் அர்ச்சகர் சிரித்துக்கொண்டு.

          இரண்டுபேர்களும்  பிரிகிற இடம் வருகிறது. அர்ச்சகர் அவரைக் கூப்பிட்டு ஐந்து ரூபாய் பணம் கொடுக்கிறார்.  7347க்கு சந்தோஷமாகப் போய்விடுகிறது.  அர்ச்சகர்,  ‘கடனாகத்தான் கொடுத்திருக்கிறேன். ஒண்ணாம் தேதி கொடுத்து விட வேண்டும்,’ என்கிறார்.  அடுத்த நான் குழந்தையைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு வரச் சொல்கிறார். மகிழ்ச்சி அடைந்த 7347 குழந்தையை அழைத்துக் கொண்டு வருவதாகக் கூறுகிறார். 

          இக்கதை 1958ல் சரஸ்வதி பத்திரிகையில் வந்திருக்கிறது.  இதில் நிகழ்கிற பெரும்பாலான விஷயங்கள் இன்றும் நிஜம். இக் கதையில் இறுதியில் மனிதாபிமானம் தென்படுகிறது.  இக் கதையில் கடைசி வரை 7347 என்று பெயர் குறிபிடாமல்   ஒரு போலீசுகாரரை அறிமுகப் படுத்துகிறார்  சுந்தர ராமசாமி. 

         —–

Series Navigation2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *