சுமை துணை

தொப்பி
தண்ணீர் போத்தல்
சிறிய கைப்பை
துணிப்பை
மொபைல் சார்ஜர்
அடங்கிய தோள் சுமை
வசவுக்கு ஏதுவாகும்
நகரப் பேருந்தில்

இரவுக்கு
சுமையை
முடிவு செய்யும்
உரிமை உண்டு
தாறுமாறாகக்
கனவுகளைக்
கிழித்து வீசும்

பயணங்களினுள்
எந்தக் கண்ணி
தனது
என்று இனம் காண
எந்தப் பயணிக்கும்
ஒழியவில்லை

துணை சுமை
இடம் மாறும் போது
எழுத்து
இலக்கியமாகும்

அவள் முதுகுச்சுமை
காட்டும்
வண்ணங்கள்
எனக்கு
அன்னியமானவை
உள்ளிருப்பவையும் தான்

Series Navigation