என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே. தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு ;பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான். இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல. […]
சிவக்குமார் அசோகன் சென்னை. அதிகாலை ஐந்தரை மணி. தாம்பரத்திலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்ட வசந்தி, சுதாகரை செல்போனில் அழைத்தாள். ”சொல்லுங்க வசந்தி, எங்கே இருக்கீங்க?” ”நான் வெஸ்ட் மாம்பலம் டிக்கெட் எடுத்துட்டு தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கிறேன் சுதாகர்!” ”ஓகே, நான் வெஸ்ட் மாம்பலம் ஸ்டேஷன் வந்துடறேன். உங்க ஹாஸ்டல் பக்கத்துல ரெங்கநாதன் தெருல தான் இருக்கு!” ”ஹாஸ்டல் நல்லா இருக்குமா சுதாகர்?” ”கொஞ்சம் அப்படி இப்படி தான். உங்களோட ரெண்டு பேர் தங்குவாங்க. […]
ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினத்தின் முகத்தில் திகைப்பு அப்பியிருந்தது.. அவனது விரிந்த விழிகளிலிருந்து அவனது திகைப்பை லலிதாவும் புரிந்துகொண்டாள். தற்செயலான சந்திப்பாக அது இருக்காது என்று அவனுக்குத் தோன்றியது. தன் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்து தன்னைப் பின்தொடர்ந்து ஓட்டலுக்கு வெளியேயும் காத்திருந்துவிட்டு அவள் வந்திருந்ததாக அவன் ஊகித்தான். அவளை எண்ணி அவனுக்குப் பாவமாக இருந்தது. அவன் பார்வை சுழன்றது. ரங்கன் அன்று கடற்கரைக்கு வந்தது போல் இன்றும் வந்து தங்களைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது எனும் கேள்வி அவனை […]
ரெ. மரகதவல்லி வேண்டுவது விருப்பானால் விருப்பது இருப்பானால் இருப்பது பொறுப்பானால் பொறுப்பது வெறுப்பானால் வெறுப்பது வெளியாகும் வெறுப்பது வெளியானால் வெளியது பரமாகும் பரமது இருப்பானால் இருப்பது ஜீவனாகும் ஜீவனது வெளியானால் வெளியது பரமாகும் பரமது வெளியானால் துதிப்பது சிவமே சிவமே முடிப்பது சிரமமே சிரமமே நினைவும் நிகழ்வும் சுழல்வது மெய்யே மெய்யே ~
ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச் செய்கிறார்கள்…. பின்னொருநாள் அதே இதழின் வேறு பதிப்பின் பக்கங்களை புரட்டி பாதி கடந்திருந்த போது.. சாகசபட்சிகளால் எழுதப்பட்ட பெண்ணியக் கவிதையும் கட்டுரையும் ஏகத்துக்கும் எடுத்துரைக்கும் இதோபதேசம் அதே வாசகனின் மனத்தில் என்ன சிந்தையை வித்திட […]
வளவ. துரையன் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் ஆண்டு தோறும் குமரகுருபர சுவாமிகளுக்கு விழா எடுப்பார்கள். 1937- ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவிற்கு உ.வே.சா போயிருந்தார். அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்க ஓர் இடையனை நியமித்திருந்தனர். மாடுகளைப் பற்றித் தான் அறியாதவற்றை அறிந்து கொள்ளலாம் என்று அவனிடம் உ.வே.சா பேச்சுக் கொடுத்தார். அவன் மாடுகளின் வகைகள், மாடுகளைப் பிடிக்கும் முறைகள், சுருக்குப் போட்டுக் காளைகளை அடக்குதல், ஆகியனவற்றைக் கூறினான். பிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போவதைப் […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (What Think You I Take My Pen in Hand ?) (To the East and To the West) 1. என் கை பேனாவைத் தொடும்போது 2. கிழக்குக்கும், மேற்குக்கும் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1. என் கை பேனாவைத் தொடும் போது பதிவில் […]
முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். […]
பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் இலைகள். ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாய் மூன்றுமூன்றாய் என்று நுனிகள். கூர்மையாக அல்ல. சமாதானமாக. வேலாயுதத்தை நினைவுபடுத்தும் சில நுனிகள். கணினியில் சுண்டெலியோடு நகரும் கைவிரல்களை நினைவுபடுத்தும் சில நுனிகள். v என்ற ஆங்கில எழுத்தைக் காட்டி வெற்றி என்று சொல்லும் சில நுனிகள். ஒரே தண்டில் ஏழெட்டு கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் ஏழெட்டு இலைகள். அகலமாய் […]
தொப்பி தண்ணீர் போத்தல் சிறிய கைப்பை துணிப்பை மொபைல் சார்ஜர் அடங்கிய தோள் சுமை வசவுக்கு ஏதுவாகும் நகரப் பேருந்தில் இரவுக்கு சுமையை முடிவு செய்யும் உரிமை உண்டு தாறுமாறாகக் கனவுகளைக் கிழித்து வீசும் பயணங்களினுள் எந்தக் கண்ணி தனது என்று இனம் காண எந்தப் பயணிக்கும் ஒழியவில்லை துணை சுமை இடம் மாறும் போது எழுத்து இலக்கியமாகும் அவள் முதுகுச்சுமை காட்டும் வண்ணங்கள் எனக்கு அன்னியமானவை உள்ளிருப்பவையும் தான்