செய்தி வாசிப்பு

Spread the love

 

சத்யானந்தன்

 

யானைகள் காடுகளை விட்டு

நீங்கி

அப்பாவி

மக்களின் குடியிருப்புகளில்

அட்டகாசமாய்ப்  புகுந்து

அநியாயம் செய்தன

 

இயற்கை

மலையில் வெறி வந்து

நிலத்தைச் சரித்து

பேரிடர் ஏற்படுத்தியது

 

கூலித் தொழிலாளிகள்

கூட்டணி அமைத்து

சதிகாரர்களுடன்

உலக அளவில்

ஒப்பந்தம் போட்டு

மரங்களைக் கடத்துகிறார்கள்

 

விவசாயி

சாகுபடி செய்யாமல்

தற்கொலை

செய்து விட்டார்

 

பாலியல் வன்முறைக்கு

வெளியில் நடமாடும்

பெண்களே காரணம்

Series Navigationபா. ராமமூர்த்தி கவிதைகள்வேர் பிடிக்கும் விழுது