செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

 

முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது.

mars-map-marte-vallisஇன்று செவ்வாய் கிரகம் மிகவும் குளிராகவும், வரண்டும் இருக்கிறது. அதன் தண்ணீர் பெரும்பாலும் துருவங்களில் உறைபனியாக சிக்கிக்கிடக்கிறது. ஆய்வாளர்கள் இந்த செவ்வாய் கிரகத்தின் பரப்பு கடந்த 2.5 பில்லியன் வருடங்களாக வரண்டுதான் கிடக்கிறது என்று கருதுகிறார்கள். இருப்பினும், இதன் பரப்பில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஓடிய தண்ணீர் வெள்ளத்தின் தடயங்கள் வரண்ட ஆற்றின் தடயமாக கிடக்கிறது.
எல்ஸியம் பிளாண்டியா என்ற இடத்தின் கீழ் முப்பரிமாண ரேடார் கொண்டு ஆராய்ந்ததில் பல ஆழ் ஆறுகள் ஓடியிருப்பதன் தடயங்கள் இருக்கின்றன. படம் கீழே.

OutreachFig

 

நன்றி ஸ்பேஸ்.காம்

http://www.space.com/20111-mars-megaflood-underground-radar.html

Series Navigationஆழிப்பேரலைஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.