அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 28 of 28 in the series 10 மார்ச் 2013

அக்னிப்பிரவேசம்-26 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றிரவு பாவனாவுக்கு ஏனோ ரொம்ப பதற்றமாக இருந்தது. அது எந்த காரணத்தாலும் ஏற்பட்ட பதற்றம் இல்லை. இப்பொழுதெல்லாம் அப்படித்தான் இருந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாய் பாஸ்கர் ராமமூர்த்தி மேலும் சாடிஸ்ட் ஆக மாறிக் கொண்டிருந்தான். வீட்டிலேயே குடிக்கத் தொடங்கிவிட்டான். ஒருகாலத்தில் தந்தையின் பக்கபலம்தான் இருக்கிறதே என்று தைரியமாய் இருந்தாள் பாவனா. அவர் எதைச் செய்தாலும் தீவிரமாய் யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் பண்ணுவார் என்பது […]

மூன்று வருட தூங்குமூஞ்சி நெதாரோ

This entry is part 27 of 28 in the series 10 மார்ச் 2013

ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன்பு, ஒரு வயதான பெரியவரும் அவரது மனைவியும் மகனும், ஒரு சிறிய அழகிய கிராமத்தில் வசித்து வந்தனர். அப்போது அவர்களது மகன், வயல்வெளிக்குச் சென்று வேலை செய்து பிழைப்பு நடத்தும் வயதை அடைந்திருந்தான். ஆனால் அவன் அதைச் செய்யாமல், காலை முதல் மாலை வரை தூங்கிக் கொண்டேயிருந்தான். அவன் அப்படியே மூன்று வருடங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தான். அவனை அந்த கிராமவாசிகள் அனைவரும், தூங்குமூஞ்சி நெதாரோ என்றே அழைக்கும் அளவிற்கு அவன் பிரபலமாகியிருந்தான். அவனது […]

(5) – செல்லப்பாவின் தமிழகம் உணராத வாமனாவதாரம்

This entry is part 26 of 28 in the series 10 மார்ச் 2013

எழுத்து பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்களோ என்னவோ நடந்தது. எழுத்து மாதப் பத்திரிகையாக, பின்னர் காலாண்டு பத்திரிகையாக, பின்னர் எழுத்தை நிறுத்தி விட்டு பார்வை என்ற பெயரில்… இப்படி செல்லப்பாவின் பிடிவாதமும் மன உறுதியும், எவ்வளவு நஷ்டங்கள் வந்தாலும், உழைப்பு வேண்டினாலும், மனம் தளராது முனைப்புடன் செயலாற்றுவது என்பதை செல்லப்பாவிடம் தான் பார்க்கவேண்டும். அவர் எழுத்து நடத்திய காலத்தில், சில வருஷங்கள் கழித்து க.நா.சு. இலக்கிய வட்டம் என்ற மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். அதிலோ இல்லை […]

“நான் மரணிக்க விரும்பவில்லை”- ஹுயூகோ ஷாவேஸ் உச்சரித்த கடைசி வரி

This entry is part 25 of 28 in the series 10 மார்ச் 2013

ஹெச்.ஜி.ரசூல் ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்”. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ்.நான் மரணிக்க விரும்பவில்லை” என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. […]

லாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு

This entry is part 24 of 28 in the series 10 மார்ச் 2013

லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே. இந்த முஸ்லீம்கள் கிறிஸ்துவர் வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அபகரித்து மீதமுள்ள பொருள்களை தெருவில் போட்டு எரித்துள்ளார்கள். சோஹைல் சுகேரா என்ற எஸ்.எஸ்.பியும் இந்த முஸ்லீம்களால் பலத்தகாயமடைந்துள்ளார். இந்த போலீஸாரை முஸ்லீம்கள் கல்லாலடித்துள்ளனர். ஏற்கெனவே அந்த அவதூறு செய்தவரை வெள்ளிக்கிழமையன்று கைது செய்துவிட்ட […]

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

This entry is part 23 of 28 in the series 10 மார்ச் 2013

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. 1971இல் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போன்று ஜமாத்- ஷிபிர் ஆட்கள் ஆறு கோவில்களை இடித்து உடைத்துள்லனர். நவகாளி, கைபந்தா, சிட்டகாங், ரங்கபூர், ஸில்ஹைட், சைபனாவாபிகஞ்ச், ராஜ்கன்ஞ் இடங்களில் ஏராளமான இந்துக்களது வீடுகளையும் வியாபார தளங்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்று […]

செவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு

This entry is part 22 of 28 in the series 10 மார்ச் 2013

  முப்பரிமாண ரேடார் படங்கள் மூலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் ஆழத்தில் முன்னொரு காலத்தில் ஓடிய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முன்பு கருதியதை விட இரண்டு மடங்கு ஆழத்தில் இந்த வெள்ளம் ஓடியிருப்பது படங்களில் தெரிகிறது. இன்று செவ்வாய் கிரகம் மிகவும் குளிராகவும், வரண்டும் இருக்கிறது. அதன் தண்ணீர் பெரும்பாலும் துருவங்களில் உறைபனியாக சிக்கிக்கிடக்கிறது. ஆய்வாளர்கள் இந்த செவ்வாய் கிரகத்தின் பரப்பு கடந்த 2.5 பில்லியன் வருடங்களாக வரண்டுதான் கிடக்கிறது என்று கருதுகிறார்கள். இருப்பினும், […]

ஆழிப்பேரலை

This entry is part 21 of 28 in the series 10 மார்ச் 2013

  – சிறுகதை   கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட..  அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை […]

வனசாட்சி அழைப்பிதழ்

This entry is part 20 of 28 in the series 10 மார்ச் 2013

அன்பு நண்பர்களே, வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை ()நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா, திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள். வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். -‍தமிழ்மகன்  

கவிதை

This entry is part 19 of 28 in the series 10 மார்ச் 2013

உதயசூரியன்   வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம்  பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும் அவர்களின் பேச்சு பணியை பற்றித்தான் சில சமயம் தேவையில்லா அறிவுரைகள் எனினும், என்றும் இவளின் கால்கள் நகர்ந்தது இல்லை வசீகர புன்னகையும் குன்றியதில்லை அவர்கள் கண்டிக்கையில் இவளின் தலை மத்தளம் இசைக்கும் சாதாரண மனிதர்கள் […]