சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சென்னையில் டிசம்பர் 16 (இன்று) சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத ராணுவத்தைப் பாரட்டியது.
விழாவில் பங்கு கொண்ட கர்னல் ப்ரதீப் குமார் சென்னை வெள்ளதில், ஒவ்வொரு நகரவாசியும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ததை கவனத்தில் கொண்டு வந்தார். சென்னை மக்களின் ஒடோடி வந்து உதவி செய்யும் மனப்பான்மை நம் நாட்டிற்கே முன்னுதாரணம் என்று கூறினார். மேலும், பலர் விடுமுறை எடுத்து, கட்டுபாடாக சேவை பணியில் ஈடுப்பட்டது பாரட்டுதலுக்குரியது.
Lt. Col. திரு ராஜா பிள்ளை அவர்கள் இந்திய ராணுவத்தினரின் இணையற்ற வீரத்திற்கு அடையாளமாக 1971 டிசம்பர் 16 அன்று பாரத வீரர்கள் பாகிஸ்தானை மண்டியிட வைத்து 93,000 பாக் வீரர்களைப் போர்கைதிகளாகப் பிடித்து அபார வெற்றியை நினைவு கூர்ந்தார். எனவே நாடு நெடுக டிசம்பர் 16 ஐ வெற்றித் திருநாளாக கொண்டாடும் மரபு தொடங்கியது.
சென்னையிலும் பல மாவட்டங்களிலும் வெள்ள நிவாரணத்தில் களம் இறங்கிய பாரத ராணுவத்தினர் 19500 மக்களை மீட்பதில் அபார வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்கள்.
விழா நடத்திய சேவா பாரதியும் தனது 5500க்கும் மேற்பட்ட (ஆண்-பெண்) தொண்டர்களைக் களமிறக்கி மீட்பு-நிவாரண-மறுவாழ்வுப் பணியை கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி சுப ஸ்ரீ ஸ்ரீராம், செயல் இயக்குனர் மற்றும் முதன்மை நிதி அதிகாரி, ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிட்., சென்னை ராணுவத்தின் பங்கை பாராட்டினார். ஸ்வாமி விமுர்த்தானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார்.
மானனீய சூரிய நாரயண ராவ், ஆர்.எஸ்.எஸ் மூத்த அதிகாரி கர்னல் ப்ரதீப் குமார் மற்றும் Lt. Col. திரு ராஜா பிள்ளை அவர்களையும் ஷீல்டு தந்து கௌரவித்தார்.
IMG_20151216_182724
01

Series Navigationமாமழையே வருக !வாரிசு