சொல்லவேண்டிய சில

This entry is part 5 of 21 in the series 27 ஜூன் 2016

 sol1

இப்படிச் சொன்னால் ‘தலைக்கனம்’ என்று பகுக்கப்படலாம். ஆனால் இந்த உணர்வு உண்மையானது. ஒரு அற்புதமான எழுத்தாளரை மொழிபெயர்த்த பிறகு, அல்லது ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்த பிறகு அதற்கென பரிசு பெறுவது என்பது எனக்கும் எனக்கும் அல்லது எனக்கும் நான் மொழிபெயர்த்த மேதைக்கும் இடையேயான தேவையற்ற குறுக்கீடாகவே தோன்றுகிறது. தாஸ்தாவ்ஸ்கியை மொழிபெயர்க்கக் கிடைத்ததே ஆன பெறும் பேறு என்கையில் அதற்கு ஒரு பரிசை தாஸ்தாவ்ஸ்கியை அறிந்த அறியாத, அறைகுறையாக அறிந்த அல்லது அவர் பெயரை மட்டுமே அறிந்து ப்ராண்ட் நேம்’ஆக அதைப் பயன்படுத்துகிற, நல்லவரோ அல்லவரோ, பணம் இருப்பதால் மட்டுமே இலக்கியப் புரலவலராகிவிட்ட இன்னபிறரிடமிருந்து பரிசு பெறவேண்டிய தேவை என்ன என்றும் அது ஒருவிதத்தில் படியிறக்கமாகவும் திரும்பத்திரும்பத் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அப்படியேதான், அருமையான கவிதை ஒன்றை எழுதிவிடுவதே ஒரு பெறும் பேறு!

sol2

அதேசமயம், நம் நூல்களை வெளியிடுவோருக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை அவர்களுக்கு மறுக்கிறோமோ என்ற குற்றவுணர்வும் சேருகிறது. தவிர,பிறரிடம் கொடுத்தால், நாம் பிரசுரிக்க விரும்பும் நூல்களை – நமதேயாகட்டும், பிறருடையதாகட்டும் – குறித்த காலத்தில் பிரசுரிக்க முடியாமல் போய்விடுகிறது. நண்பர்களிடம்தான் கொடுக்கிறோம், எனில், அவர்களுக்கும் பணப்பிரச்னை. எனவே, குடிசைத்தொழில் போல் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa alphabets). முதலில் நான்கு நூல்கள் கொண்டுவந்துள்ளேன். புத்தகங்களின் முகப்பு அட்டைகளைப் பதிவேற்றம் செய்துள்ளேன்.

sol3

sol4

sol6

sol7

sol8

sol10

வந்துள்ள நான்கு நூல்களின் மொத்தவிலை ரூ.370. மொத்தமாக வாங்கினால் ரூ300க்குப் பெற்றுக்கொள்ளலாம். தபால் செலவுகள் தனி. வரவுள்ள ஐந்து நூல்களுமாகச் சேர்த்து ரூ330. ஆக மொத்தம்  ரூ700. மொத்தமாக வாங்கினால் ரூ 600. தபால் செலவுகள் தனி. வேண்டுவோர் என் மின்னஞ்சல் முகவரியில் தெரியப்படுத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.

  1. இப்போது‘ – என் (ரிஷி) கவிதை நூல்
  2. RAIN BEYOND AND OTHER POEMS (என் ஆங்கிலக் கவிதைகளின் சிறு தொகுப்பு)
  3. UPS & DOWNS ( A BI-LINGUAL BOOK – A BLOGGER’S MUSINGS by G.VENKATESH)
  4. சின்னஞ்சிறு கிளியேகோமதி (மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார்)

 

* கருப்புவெள்ளை அட்டைதான். எனக்குப் பிடித்தது.

 

 

வரவுள்ள புத்தகங்கள்

1.சொல்லும் சொல் ப்ரம்மராஜனின் – கவிஞர் பிரம்மராஜனின் கவித்துவம் குறித்த கட்டுரைகள் அடங்கிய நூல்.

  1. அருங்காட்சியகம் – என்னுடைய (அநாமிகா) சிறுகதைகள் 11 இடம்பெறும் நூல்.
  2. வைதீஸ்வரனின் இலக்கிய விரிவெளி ( கவிஞர் வைதீஸ்வரன் குறித்த கட்டுரைகள் இடம்பெறும் தொகுப்பு)

4.மாண்டிசோரி அம்மையாரைப் பற்றிய ஒரு சிறு நூல் – அருள்செல்வி என்ற மாண்டிசோரி (மாந்தசோரி என்று தான் தமிழில் எழுதவேண்டும் என்றார்.)

  1. மாண்டிசோரி ஆசிரியை ப்ரசில்லா எழுதிய குழந்தைகளுக்கான குட்டிப்பாடல்கள்

சென்னையில் திருமதி பத்மினி கோபாலனும் அவர் நட்பினரும் நடத்திவரும் ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் பெருமுயற்சியினால் சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் இந்தத் தரமான கல்வி குழந்தைகளுக்குக் கிடைத்துவருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் குழந்தைகளுக்கு மாண்டிசோரிக் கல்விமுறையில் கற்பித்துவருகின்றனர். தோழியர்கள் அருள்செல்வியும் ப்ரசில்லாவும் அந்த ஆசிரியப் பெருமக்களில் இ்ருவர்.

sol11

முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. தற்போது சென்னையில் இருக்கும் எழுத்தாளர் கோமதியிடம் அவருடைய நூலைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். ஜூன் 9ஆம் தேதி அவர் மாரடைப்பால் காலமானதாக சதாரா மாலதியின் மகளிடமிருந்து அன்று மின்னஞ்சல் வந்தது. தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தந்துவீடவேண்டுமென்றும், தனக்கு ஈமச்சடங்குகள் செய்யவேண்டாம் என்றும் கோமதி ஐசியூவுக்குப் ஓவதற்கு முன் கையெழுத்திட்டுத் தந்ததாகத் தெரிவித்திருந்தார். நேர்ப்பேச்சிலும் கோமதி அவர்கள் அதை என்னிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அவருடைய மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமாயிருந்தது.

MODERNITY IS NOT IN DRESS; BUT IN OUTLOOK என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.

 

 

 

Series Navigationயானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *