தங்கம்மூர்த்தி கவிதை

தங்கம்மூர்த்தி

எனக்கே
எனக்கென்றிருந்த
ஒரே ஒரு நட்சத்திரமும்
நேற்றிரவு
திருடு போய்விட்டது.

நெடுவானில்
தவித்தபடி அலையும்
என்னைக்
கவ்விக்கொள்கிறது
இருள்.

இருளோடு
இணைந்து பயணித்து
ஒளி தேடி அலைந்து
களைத்து
இருளுக்குள்
இருளாகிறேன்

புலரும் கலை
புரியாமல்.

Series Navigationபயண விநோதம்விடுதலையை வரைதல்