தன்னிகரில்லாக் கிருமி

 

யோக நித்திரை கலைந்த போது

கடவுள் எதிரே

ஒளிதேவன்

 

“கிருமிகள்

நோய் என்னும் இருளை

இனிப்பரப்ப முடியாது

கவலை நீங்குவீர்”

 

“இறைவா

எப்படி இந்த அற்புதம்?”

வியந்தார் ஒளி.

 

“அவசரப்படாதீர்

அற்புதம் இனிமேல் தான்

நிகழும்…”

 

“புரியவில்லை”

 

“கிருமிகளுக்கு

மனிதரை விடவும்

வலிய மனசாட்சியை அருளி

இருக்கிறேன்”

 

“நன்றி இறைவா….

இனி இருள் என் வழியில் வராது”

 

“மனிதனின் உடலை

உருக்குலைப்பது

இனி என்னால் இயலாது…”

என்று தொடங்கியது

காச நோய்க் கிருமி…..

மிகப்பெரிய பாவம்…..”

 

“குழந்தைளைக் கொசு மூலம்

இனித் தாக்க மாட்டேன்” இது டெங்கு

 

“கொலைகாரனாய்த் திரிவது

இனியும் சாத்தியமில்லை” காமாலைக் கிருமி..

 

கழிவிரக்கமான ஒன்று கூடலின்

சோகத்தைக் கிழித்து ஒலித்தது எய்ட்ஸின் குரல்

“மதவெறியை விட நாம் என்ன பெரிய பாதகம்

செய்து விட்டோம்?

மடையர்களே……’

 

குற்ற உணர்வு நீங்கி

குதித்தெழுந்தன கிருமிகள்

 

-சத்யானந்தன்

Series Navigationஒத்தப்பனைநியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு