தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++

தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெற்றது !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும்  தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது.  தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது.  இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது.  அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் !  அல்லது  தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? இரண்டு வழிகள் உள்ளன. சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு தமிழர்  வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.  தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன. இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம். தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.     தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].   திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம்.  [என் ஊகிப்பு].  

இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
 இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.   60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம். எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.

 கனிவுடன்,சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

வரலாறு

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]

+++++++++++++++

தமிழர் அறுபதாண்டு அட்டவணை

எண். பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
           
01.பிரபவசங்க முதல்ஆண்டுPrabhava1987–1988 31.ஹேவிளம்பிதிவாகரர்ஆண்டுHevilambi2017–2018
02.விபவஔவையார்ஆண்டுVibhava1988–1989 32.விளம்பிஅருணகிரிஆண்டுVilambi2018–2019
03.சுக்லதிருவள்ளுவர்ஆண்டுSukla1989–1990 33.விகாரிதியாகராஜர்ஆண்டுVikari2019–2020
04.பிரமோதூதபுத்தர்ஆண்டுPramodoota1990–1991 34.சார்வரிஜி.யூ. போப்ஆண்டுSarvari2020–2021
05.பிரசோற்பத்திதொல்காப்பியர்ஆண்டுPrachorpaththi1991–1992 35.பிலவகட்டப் பொம்மன்ஆண்டுPlava2021–2022
06.ஆங்கீரசநக்கீரர்ஆண்டுAangirasa1992–1993 36.சுபகிருதுவீரமாமுனிஆண்டுSubakrith2022–2023
07.ஸ்ரீமுகஇளங்கோஆண்டுSrimukha1993–1994 37.சோபகிருதுகால்டுவெல்ஆண்டுSobakrith2023–2024
08.பவகண்ணகிஆண்டுBhava1994–1995 38.குரோதிதாயுமானர்ஆண்டுKrodhi2024–2025
09.யுவமணிமேகலைஆண்டுYuva1995–1996 39.விசுவாசுவநாயக்கர்ஆண்டுVisuvaasuva2025–2026
10.தாதுசாத்தனார்ஆண்டுDhaatu1996–1997 40.பரபாவகுமர குருபரர்ஆண்டுParabhaava2026–2027
11.ஈஸ்வரகம்பர்ஆண்டுEesvara1997–1998 41.பிலவங்கஆறுமுக நாவலர் ஆண்டுPlavanga2027–2028
12.வெகுதானியஒட்டக்கூத்தர்ஆண்டுBahudhanya1998–1999 42.கீலககுமரிஆண்டுKeelaka2028–2029
13.பிரமாதிஆழ்வார்கள்ஆண்டுPramathi1999–2000 43.சௌமியதிருத்தணிஆண்டுSaumya2029–2030
14.விக்கிரமசித்தர்கள்ஆண்டுVikrama2000–2001 44.சாதாரணகாந்தியார்ஆண்டுSadharana2030–2031
15.விஷுஆண்டாள்ஆண்டுVishu2001–2002 45.விரோதகிருதுகாமராசர்ஆண்டுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுஜெயங்கொண்டார்ஆண்டுChitrabaanu2002–2003 46.பரிதாபிஇராஜாஜிஆண்டுParidhaabi2032–2033
17.சுபானுபெருந்தேவனார்ஆண்டுSubhaanu2003–2004 47.பிரமாதீசபரிதிமால்ஆண்டுPramaadhisa2033–2034
18.தாரணதிருத்தக்கர்ஆண்டுDhaarana2004–2005 48.ஆனந்தசிதம்பரனார்ஆண்டுAanandha2034–2035
19.பார்த்திபவளையாபதிஆண்டுPaarthiba2005–2006 49.ராட்சசபாரதியார்ஆண்டுRakshasa2035–2036
20.வியசேக்கிழார்ஆண்டுViya2006–2007 50.நளபாரதிதாசன்ஆண்டுNala2036–2037
21.சர்வசித்துபூங்குன்றனார்ஆண்டுSarvajith2007–2008 51.பிங்களபெரியார்ஆண்டுPingala2037–2038
22.சர்வதாரிநாலடியார்ஆண்டுSarvadhari2008–2009 52.காளயுக்திஅண்ணாதுரைஆண்டுKalayukthi2038–2039
23.விரோதிமுத்தொள்ளாயிரம்ஆண்டுVirodhi2009–2010 53.சித்தார்த்திவரதராசர்ஆண்டுSiddharthi2039–2040
24.விக்ருதிஅப்பர்ஆண்டுVikruthi2010–2011 54.ரௌத்திரிமறைமலையார்ஆண்டுRaudhri2040–2041
25.கரசுந்தரர்ஆண்டுKara2011–2012 55.துன்மதிகல்யாண சுந்தரர் ஆண்டுDunmathi2041–2042
26.நந்தனசம்பந்தர்ஆண்டுNandhana2012–2013 56.துந்துபிவிசுவநாதம்ஆண்டுDhundubhi2042–2043
27.விஜயவாசகர்ஆண்டுVijaya2013–2014 57.ருத்ரோத்காரிகண்ணதாசன்ஆண்டுRudhrodhgaari2043–2044
28.ஜயவில்லிபத்தூரார்ஆண்டுJaya2014–2015 58.ரக்தாட்சிஅப்துல் கலாம் ஆண்டுRaktakshi2044–2045
29.மன்மதபுகழேந்திஆண்டுManmatha2015–2016 59.குரோதனஇளையராசர்ஆண்டுKrodhana2045–2046
30.துன்முகிபட்டினத்தார்ஆண்டுDhunmuki2016–2017 60.அட்சயரகுமான்ஆண்டுAkshaya2046–2047
    

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

நூலுதவி : 

  1. தமிழ் இலக்கிய வரலாறு –  டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய  அக்காதெமி வெளியீடு [2003]
  2. தமிழ் இலக்கிய வரலாறு  -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
Series Navigationநானென்பதும் நீயென்பதும்….திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.