தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்

Spread the love

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

*  ஜனவரி  மாதக்கூட்டம் . 7/1/18 மாலை.5 மணி..       பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு ., (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர் நடைபெற்றது.

தலைமை : ஏ.வி.பழனிச்சாமி-பொருளாளர் .க.இ பெ.மன்றம்

சிறப்பு விருந்தினர்: கன்யாகுமரி கு.சிவராமன் எழுத்தாளர் சிறப்புரையாற்றினார். அவரின் உரையில் :;  

இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும் “ என்றார்.

 

* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .

மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்

திருப்பூர் பண்பாட்டு மையம் யோகி செந்தில் பேசுகையில் கல்வி அழுத்தத்தால் குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.  அரசுப்பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கான- ஆலோசனை  தனி வகுப்புகள் அவர்களின் மொழி தெரிந்த  ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்பட்டாலே அவர்கள் பள்ளிகளில் சரியாக இணைய வாய்ப்பு இருக்கிறது.பள்ளி வளாகமே அவர்களின் கல்விச்சூழலுக்கு ஆரோக்யமாய்  வழிவகுக்கும். இல்லாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்ட சூழலில் அவர்களைப் பார்ப்பது சுமுகமானதல்ல “ என்றார்.

 

* நூல்  அறிமுகம்..:    “ சுதந்திரப்போரில் கோவை கண்ணம்பாளையம்  தியாகிகள் “ நூல் பற்றி  தோழர் ந. சேகர் பேசினார்

* முதல் ( நாவல் ) அனுபவம் :

கொங்கு நாவலாசிரியர் செந்தமிழ்வாணன் தன் ” சித்த முற்றம் ” நாவல்  பற்றிப் பேசினார்.

* உரைகள் : படைப்பு அனுபவம் என்பதில் எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்

மிலிட்டரி பொன்னுசாமி ( சீன டெங்ஷியோபிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கட்டுரைகள் நூல்)

எஸ்.ஏ.காதர் ( குருவிக்காரன் -சிறுகதைத் தொகுப்பு )

* தமிழ்க்கல்வி எப்படி இருக்கிறது- மூவர் உரைகள் நிகழ்த்தினர் .

மருத்துவர் சு. முத்துச்சாமி, யோகி செந்தில், காங்கயம் கனகராஜ்

* பின்வரும் நூல்கள் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன், கா.ஜோதி செய்தனர்.

மனுஷ்யபுத்ரன் கவிதை நூல் ( அந்நிய நிலத்துப் பெண் )                   -சாருநிதேதிதா மொழிபெயர்ப்பு நூல் (ஊரின் மிக அழகான பெண் )

-பிருந்தா சாரதி கவிதை நூல் (பறவையின் நிழல் ),                             -சிங்கப்பூர் பிச்சினிக்காடு இளங்கோ கவிதைநூல் ( அங்குசம் காணா யானை)

மற்றும்…பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்  வழங்கப்பட்டன. சசிகலா.,பிஆர்நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர்  2202488

 

Series Navigationகோதையும் குறிசொல்லிகளும்