வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது.
ஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று யாராவது சொன்னால் அது எழுத்தாளர் ஜெயமோஹனாக இருக்க முடியாது. கழக அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும். பெயர்களை மாற்றுவது அவை தம்முள் தேக்கி வைத்திருக்கும் குறியீட்டையே மாற்றுவதாகும். பெயர்கள் வெறும் பெயர்கள் என்கிற நிலையிலிருந்து இவ்வித குறீயீட்டுத்தன்மையை அடைவதன்பின்னால் பல வருட உழைப்பும் முயற்சியும் இருக்கிறது. ராக் அண்ட் ரிபப்ளிக் என்று ஜீன்ஸ் பிராண்ட். இதை கல்லும் குடியரசும் என்று தமிழ்ப்படுத்தினால் அது அந்த ஜீன்ஸ் பிராண்டையே அவமதிப்பது போன்றதுதான். ஆனால் இந்த பெயர்மாற்ற பயங்கரவாதிகளுக்கு அந்தக்கவலையெல்லாம் கிடையாது. ஒரு கம்பெனியையோ, பிராண்டையோ கஷ்டப்பட்டு எவனோ ஒருவன் கட்டியெழுப்பும் வரை, புது வீட்டிற்கு சாமான்களை இறக்கிக்கொண்டிருக்கும் வீட்டுக்காரனை முட்டுச் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு கதைபேசிக்கொண்டு அவன் இறக்கி முடிக்கும் வரை கவனிக்கும் கேரள யூனியன் தோழர் மாதிரி, காத்திருந்து கவனிப்பார்கள், அவன் கட்டி முடித்து பிராண்ட் பிரபலமானவுடன் மிகச்சரியாக செந்தமிழ்ப்பட்டயத்தை எல்லோருக்கும் தெரியுமாறு தோளில் மாட்டிக்கொண்டு, அவனது கம்பெனி பெயரையோ பிராண்டையோ தமிழ்ப்படுத்தக் கிளம்பிவிடுவார்கள்.
ட்விட்டர் என்பதை கிறிச்சான் என்று மொழிபெயர்க்க மூளையைக்கசக்கி எவ்வளவு படைப்பூக்க உழைப்பை அர்ப்பணித்திருக்கிறோம்! விண்டோஸை ஜன்னல்கள் (அய்யோ அது சுத்த தமிழில்லையே- சாளரங்கள்?) என்று மொழி பெயர்க்கும் அரிய வாய்ப்பைத் தவற விட்டு செய்து விட்டோம். ஆனால் வெகு விழிப்போடிருந்து ஃபேஸ்புக்கை முகப்புத்தகமாக்கி விட்டோம். தேன் வந்து பாய்ந்து விட்டது காதினிலே! இப்படியே போனால் மைஸ்பேஸை என்வெளியாக்கலாம், ஆரக்கிளை சாமியாடியாக்கலாம், ப்ளாக் பெரியை கறுப்பு சதைக்கனியாக்கி கடித்துக்குதறி விடலாம், அமெரிக்கா வந்த தமிழ்ப்பேச்சாளர் ஒருவர் லாஸ் ஏஞ்செல்ஸை இழந்த தேவதை நகரம் என்றோ என்னமோ தமிழ்ப்படுத்தி விட்டுப்போனார். தமிழனை தமிழ்நாட்டிலிருந்து எடுத்தாலும் வாயில் நுரைதள்ள பெயர்களைத் தமிழ்ப்படுத்தித்தள்ளும் வெறி கொண்ட ஆர்வத்தை மட்டும் அவனிடமிருந்து பிய்த்து எடுத்து விட முடியாது.
நாம் சுயமாக நமக்குள் உள்ள உந்தலால், தேடலால், உழைப்பால் ஒரு கலையையோ, நிறுவனத்தையோ, தொழில்நுட்பத்தையோ, பிராண்டையோ கட்டியெழுப்பும்போது அது நம் பெயரை, மொழியை, கலாசாரத்தை, நம் வெற்றியை உலகெங்கும் கொண்டு செல்லும் கருவியாகிறது. ஹட யோகத்தை ஆங்கில மொழி ஹட யோகம் என்ற சொல்மூலமே தம் மொழிக்குள் இணைத்துக் கொண்டிருக்கிரது. ஆயுர் வேதத்தை மேற்கு நாட்டார் ஆயுர் வேதம் என்றுதான் செல்கிறார்கள். மும்பையின் டப்பாவாலாக்கள், டப்பாவாலாக்கள் என்றே உலகெங்கும் அறியப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தால் அவை தனது பெயரில் கொண்டிருக்கும் மூலாதார சுயத்தையும் அது தரும் தனி இடத்தையும் இழந்து விடும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (பிரேசிலின் போர்த்துக்கீசியர்கள் இன்னமும் ஒருபடி மேலே போய் சூழ்ந்துள்ள தென்அமெரிக்க ஸ்பானிஷ் மொழிக்கடலுக்கு நடுவே தனியாகத்தெரிய வேண்டுமென்று தன் நாட்டின் பியருக்கு, ஏகாந்த உருவகம் தர கிழக்குலகின் தொடர்பில் அம்மொழிக்குள் வந்த ”பிரம்மா” என்கிற பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்).
ஃபேஸ் புக் போலவோ ட்விட்டர் போலவோ சுயமாகச் சமூக வலைப் பயன்பாட்டு மென்பொருள் எதையாவது நாம் உருவாக்கியிருக்கிறோமா? நமக்கென்று ஒரு ஆபரேட்டிங் ஸிஸ்டம் உருவாக்கினோமோ, நமக்கென்று ஒரு தேடல் யந்திரம் உருவாக்கினோமா- சில கிண்டர்கார்டன் முயற்சிகளைத் தவிர. (சீனர்கள் செய்திருக்கிறார்கள், இதுபோன்ற முயற்சிகளுக்கு நம் அரசு பலவிதங்களில் உதவலாம்). அவ்வாறான மென்பொருட்களை உருவாக்கி அவற்றிற்கு தமிழ்ப்பெயர் தந்து அவற்றை வெற்றிகரமாக்கி உலகெங்கும் விரிவுபடுத்தினால் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்காதா என்ன.
எல்லாஞ்சரி, ஆனா அதுக்கெல்லாம் ஒளக்கெணுமே. டக்குனு தாரெடுத்து பூசினோமோ, ரயில்ல குறுக்கால படுத்தோமோ, பேர மாத்தினோமானு இல்லாம, வாளப்பளம் சாப்டா எளகி வெளிய போற மாதிரி, டக்குனு தமிள்ப்பற்ற வெளிய கொட்ட வளி சொல்வானா என்று எம் தமிழ்க்குமுகாயம் குமுறுவது காதில் விழுகிறது.
இன்று எந்த தமிழ் வலைத்தளத்துக்குப்போகவுமே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு கிளிக்கிற்கும் ஓராயிரம் குக்கிகள், இடைவிடாமல் கண்ணில் வந்து குத்தும் விளம்பரத்தொல்லைகள், வைரஸ் அபாயங்கள், முதன்மை பெறும் சினிமா செய்திகள் என்று பிரபல நிறுவனங்களின் தமிழ் தளங்கள் கூட மூத்திரச்சந்து போல் நாற்றமும். நோயும் நிறைந்து கிடக்கின்றன. மார்ஃபிங் டெக்னாலஜியை சி கிளாஸ் மசாலா படம் எடுத்து உலகத்தரம் என்று நமக்குநாமே தட்டிக்கொடுத்து சந்தோஷப்படுவதுபோல் எந்த தொழில்நுட்பம் நம் கையில் கிடைத்தாலும் கிழித்து நாறாக்கி மாலைபோட்டுக்கொண்டு அதனை உணர்ச்சிகரமாகக் கொண்டாடியும் விடுகிறோம். பெயரில் தார்பூசும் வெறி, பெயரைத் தமிழாக்கும் கிறுக்குத்தனம், பெயரின் குறியீட்டை மறைக்க செய்யும் தகிடுதத்தங்கள் இப்படிப்பட்டதோர் அரிதார அறத்தரம் உள்ள புழங்கு சூழலில்தான் மொழிக்கு வலுசேர்க்கும் படைப்பூக்கம், தொழில்நுட்பம், கலை வளர்ச்சி, அறிவுப்பரவல் ஆகியவையும் இயங்க வேண்டி இருக்கிறது, என்ன செய்ய?
உள்ளத்தனையது உயர்வு.
உள்ளத்தனையதுதான் உயர்வு.
அருணகிரி.
- இன்னும் புத்தர்சிலையாய்…
- குரூர மனச் சிந்தனையாளர்கள்
- கசங்கும் காலம்
- இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
- முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
- யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
- ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
- பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
- ஆன்மாவின் உடைகள்..:_
- எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
- பழமொழிகளில் ஆசை
- கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்
- தளம் மாறிய மூட நம்பிக்கை!
- காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
- பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
- கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு
- திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
- பருவமெய்திய பின்
- வினாடி இன்பம்
- தன் இயக்கங்களின் வரவேற்பு
- சாபங்களைச் சுமப்பவன்
- சிறுகவிதைகள்
- கடன் அன்பை வளர்க்கும்
- தமிழ் படுத்துதல்
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
- ஆட்டுவிக்கும் மனம்
- பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்
- ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்
- மூன்றாமவர்
- கறை
- குழந்தைப் பாட்டு
- மனபிறழ்வு
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
- மௌனத்தின் முகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு
- பல நேரங்களில் பல மனிதர்கள்
- குயவனின் மண் பாண்டம்
- எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு
- மரணித்தல் வரம்
- இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்
- பிம்பத்தின் மீதான ரசனை.:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41
- நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
- திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !
இன்னா சார் இப்டி எயிதிட்ட நீ. இப்டி எய்திதான் சார் நாங்க எங்க த்மிய் பற்றயே காமிக்கிரோம். இப்டி எய்தி எய்தி அத எங்க ஆளுங்களே பாராட்ட்றதுக்குனே மன்றம் கூட வெச்சினுகீரோம் சார். நம்ப தமில் வால்க! வலர்க!
மிகச் சரியான அவதானிப்பு. அதுவும் புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் தமிழர்கள் கருப்பங்கொல்லையில் யானை புகுவது போல திமுதிமுவென்று உள்ளே நுழைகிறார்கள். Beta Testing நிலையில் இருக்கும் கூகிள் ப்ளஸ்ஸில் தமிழர்கள் கன்னாபின்னாவென்று புகுந்து விட்டதால், மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றூ கூட பேச்சு அடிபடுகிறது !!!
தமிழர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கெனவே அலைபவர்கள் அதிகம் போல. இப்படித்தான் கோயில் கருவறைக்குள் திமு திமு வென நுழைந்த கபோதிகள் வெளி வரவே மறுக்கின்றனர்.
(தமிழர்கள் கன்னாபின்னாவென்று புகுந்து விட்டதால், மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றூ கூட பேச்சு அடிபடுகிறது !!!)
மற்றவர்களுக்கு என்றால் யாருக்கு? தெலுங்கு, கன்னட, இந்திக்காரர்களுக்கா?
ஏன், அங்கேயும் தமிழ் “படுத்தறேன்” னு போயி அரியே போற்றி சொறியே போற்றின்னு கூவறதுக்கா? ஒங்களுக்கு புரோகிதர்கள், பார்ப்பனர்களை வசைபாடுவது, இதைத் தவிர உருப்படியா ஏதும் தெரியுமா? ஒரு சவால். கூகிளில் எந்த ஒரு கீ-வேர்டையும் தேடுங்கள், ஆனால் தமிழில் டைப் செய்யுங்கள். மற்றொரு பேஜில் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தேடுங்கள். தமிழில் வெறும் வன்முறை, சினிமா போன்றவையே வரும், உதாரணம் ‘ஓவியக்கல்லூரி’ – ஓவியம் பயில விரும்பும் ஒருவன் தேடும் ஒரு சொல். இதில் ஆங்கிலப் பக்கங்கள் அவன் தபால் மூலமாகவோ இண்டர்நெட் மூலமாகவோ ஓவியம் பயில்வது பற்றி வரும். ஆனால் தமிழ் பக்கங்கள் ஓவியக் கல்ல்லூரி மாணவன் தற்கொலை என்று மட்டும் தான் வரும். பாருங்கள் தேடி. இப்படி நெகட்டிவான விஷயங்களையே யோசித்தும் ரியாக்ட் செய்தும் (தமிழைப் படுத்தாமல் அப்படியே எழுதுகிறேன் ஏனென்றால் தமிழ் எமக்கு மெத்தப் பிடிக்கும், தமிழைப் படுத்துவது அல்ல) இருக்கும் தமிழர்களின் ஆட்டிட்யுட் (attitude) மாற வேண்டும். போய் உருப்படியாய் ஏதும் செய்யுங்கள். தார் பூசியே ஆக வேண்டும் என்றால் ஏழைகள் குடிசையை மேம்படுத்துங்கள். அவர்களுக்கு சாலை வசதி செய்யுங்கள், அங்கே பூசுங்கள் தாரை, அறிவுகெட்ட வெங்காயங்களா!
இந்தத் தமிழ்படுத்துதல் பலசமயங்களிலும் படுத்தலாகவே இருக்கிறது என்பதே என் கருத்தும். தமிழை மேம்படுத்துதல் என்பதை பிரித்து படுத்துதுதல் என்று புரிந்து கொண்டு ரொம்பவே படுத்தறாங்க.
பிரஷர் குக்கர் என்பது அழுத்தக் கலன், ஷாம்பூ என்பதை கழுவான் என்று விதவிதமாக படுத்தி தமிழை மேம் படுத்தி விட்டார்கள் . அறை போட்டு (ரூம்) யோசிப்பார்களோ.
தமிழ் வளர்க்கும்(???) தமிழ் தொலைக்காட்சிகளை இவர்கள் ஒன்றும் கண்டு கொள்வதே இல்லை.