தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !

Spread the love


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணீர்த் துளிகள் நிற்காது
சொட்டக்
காரண மாகுது என் மனதே !
அதைப் புரியா திருப்பதும்
என் மனதே !
திரிகிறேன் உலகில்
அறிவிலா மனதுடன் !
அந்த மனதை
விட்டு விலக நினைத்தால்
வெட்டி விடு !

நியாயமா அது கண்மணி
மாற்றவனை நீ
மனதில் வைத்திருப்பது ?
யார் அறிவது
அடுத்தவன் மனதை ?
ஆத்மாவின் தாகம் அழுகிறது
கடுமையாய் ஓலமிட்டு!
அடுத்தவன் இதயத்தில் ஏன்
இடம் பெற ஆசை ?

எல்லாம் கனவு போல் உள்ளது
இது புரிய வேண்டும்
இவ்வுலகில் உனைப் போல்
எவரும் இல்லை !
நினைத்தபடி செல்லும்
ஒருத்தியுடன் நீ
விரும்பித் திரிவதும் சரியா ?
திரும்பிப் பார்
கண்களைத் திறந்து
உன்னை நோக்கித் தேடி வராத
ஒருத்தியை !
அமைதி அளிப்பாய்
உனது மனதுக்கு மட்டும் !
தனது சுயப் பெருமையில்
மனது வாழட்டும் !

+++++++++++++++++++
பாட்டு : 362 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University

Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 2, 2012

Series Navigationமூன்று தலைவர்களும் நம் அடையாளமும்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11