தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !

This entry is part 21 of 41 in the series 23 செப்டம்பர் 2012
தாகூரின் கீதப் பாமாலை – 32
என் வாழ்வின் கழுத்தாரம் !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஒவ்வோர் நாளும் கிடைக்கும்
ஏராள மான வெகுமதிகளில்
சிறிதளவு பெறுவேன்
சில நாட்களில்,  சில வேளைகளில்.
வசந்தத் தென்றலை
உசுப்பிடும் அச்சிறு துண்டும் !
நாட்கள் நகர்ந்தன
ஒன்றுக்குப் பின் ஒன்றாய்,  மாந்தர்
வாசலுக்கு வெளியே
வருவதும் போவதும் போல !
வழிப் பாதைப் போக்கில் அவர்கள்
வந்து மிதப்பது போல் தெரியும்.

சில சமயம்  வரும் காலைப் பொழுது

கூடு கட்டிக்  குடிபுகும்
என் வீட்டில்
எப்போதும் நானதை விழைவதாய்
எண்ணி !

ஒளிகுன்றும் போது தொடுப்பேன்

துண்டு துண்டாய்
வாழ்வுக் கழுத்தணியின்
மிச்சத் துண்டுகளைப் பின்னி.
உன்னத என் ஆரத்தின் ஒளித்துண்டுகள்
மின்னிடும்
சிதறிய நாட்களி லிருந்து !
தட்டிலிட்டு என் கொடைகளை
எடுத்தடுக்குவேன்.
ஒரு கணத்தில் ஏற்படும்
புல்லரிப்பு !
ஒரு சமயத்தில் ஏற்றிடும்
ஒளிவிளக்கு !
இசைக் கருவியின்
ஒரு நாணை மட்டும் தட்டினால்
எழுந்திடும் பாதிப் பாடல் !

+++++++++++++++++++++++++
பாட்டு : 100 தாகூர் தன் 57 ஆம் வயதில் அக்டோபர்  1918 இல்   எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  September 18, 2012

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குருபழமொழிகளில் கனவும் நினைத்தலும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *