மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
ஓரக் கண்ணால் பாதி மூடிய
உறக்க நிலையில்
உணரா மனத்தில் எண்ணித்
தாராளமாய் என்னுடன் பழகிக் கொள்ள நீ
பேரார்வம் காட்டு கிறாயா ?
அந்தச் சந்தர்ப்ப வேளையில்
நானுனக்கு என்னை த்
தானம் செய்ய வரும் போது,
பழுதாய்ப் போன எதுவும் என்னிடம்
அளிக்க எஞ்சி இருக்க வில்லை !
பழையன வற்றை எல்லாம்
களைந்தேன் என்றுனக்கு நானுறுதி
அளிக்கிறேன் !
வசந்தம் தன்னை வழங்கிடும்
தன்னுணர்வு உந்து சக்தி மூலமாய்
தன்னை யே இழந்து,
அலை மேல் என்றும் அலை
அனுப்பிப் புதியாய் !
மாதவிக் கொடி படர்கிறது
மறுபடி, மறுபடி வளைந்த வண்ணம் !
மீண்டும், மீண்டும் புதிய பூக்களை
கானகத் தேவனின்
கைக்கூடை விளிம்பு வரை
நிரப்பிடும் !
அது எனக்கு ஒவ்வொரு நிமிடத்தின்
புது வெகுமதி !
உன் மேலி ருக்கும் என் காதல்
இசைத் தொனியில் என்னை மீட்டித்
திசை திருப்பும்
நித்தியப் புத்துணர்வில் !
எல்லா இயக்கங் களிலும், எனது
எல்லாச் சிந்தனை யிலும்,
இவ்வினிய மெய்த்துவம் மணி அடிக்குது !
என் வறுமைக்கு
எந்த ஆதாரமும் இல்லை, உனக்கு நான்
கொடுப்ப தற்கு !
எடுத்துக் கொள் நீ விரும்பி யதை
எல்லாம் !
ஆயினும் ஆசைக்கோர் எல்லை
இல்லை யென அறிவாய் நீ !
என் நாட் பொழுதின் எல்லாக் கணமும்
நிரம்பி வழிகிறது
நித்தியச் செல்வக் குவியல் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 75 தாகூர் தன் 65 வயதில் [பிப்ரவரி 21, 1927] சாந்திநிகேதனத்தில் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 2, 2013
http://jayabarathan.wordpress.
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்
ரவீந்தரநாத் தாகூர் தமது 65 வது வயதில் எழுதிய இந்தக் காவியக் காதல் கவிதையை கவித்துவமிக்க அழகு தமிழில் தந்துள்ள திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு பாராட்டுகள்.. தங்களின் பன்முகச் சாதனைகள் கண்டு வியக்கிறேன். தொடரட்டும் இத்தகைய இலக்கியப் பனி நண்பரே!…..டாக்டர் ஜி.ஜான்சன்.
கீதாஞ்சலி எழுதி இலக்கிய நோபெல் பரிசு பெற்ற கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதங்களைத் தமிழில் நான் ஆக்கிடத் தொடர்ந்து வெளியிடும் திண்ணை ஆசிரியர் குழுவுக்கு என் கனிந்த பணிவான நன்றிகள்.
பழைய திண்ணையில் கீதாஞ்சலிப் பாக்கள் 103 உள்ளன.
http://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/
பாராட்டுக்கு நன்றி நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா