தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதலில் எனக்கு
வேதனை தவிர வேறில்லை
ஏது மில்லாக் காதல் எதற்கு ?
உன் இதயத்தை அவளுக் களித்து
அவளது
இதயத்தை நீ பறிக்கப் போவது
எத்தகை அறிவீனம் ?
ரத்தத்தில் வேகும் இச்சை உன்
பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர
பாலைவனத்தைச் சுற்றி
நானும் வட்டமிட்டு வருவதா ?
ஏனிந்த வீணான காதல்
சுயமதிப்பைத் தன்
வயப் படுத்தி
வைத்துள்ள வனுக்கு ?
வசந்த காலத்தின் இனிய தென்றல்
வாலிப னுக்கே !
வானம்பாடியும்
வண்ண மலர்களும்
வாலிப னுக்கே !
விழுங்கும் நிழல்தனைப் போல்
வெளிவரும் காதல்
முழு உலகை
அழித்திட !

++++++++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 355 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). தாகூரின் சொந்த மொழிபெயர்ப்பு
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali &

Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 16, 2012
*********************

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012