தூரத்து விண்மீன்கள்

Spread the love

எதைக் கொண்டும் 

நிரப்ப முடியாத 

வாழ்வின் கணங்களை 

வழிந்தோடும் தேவைகளால் 

நிரப்பிக் குடித்து

தீர்ந்த போதும் 

மீண்டும் அவற்றை 

நாடித் திரிகிறோம் 

ஆசைகளால் 

நிரப்புகிறோம் 

அடைந்த பின்னும் தீராமல் ஆசைகள் வழிந்தோட 

நமக்கான தருணங்களை தூரத்து விண்மீன்களாக்கி மறைத்தே வைக்கிறோம் 

ஒவ்வொரு 

விடியலுக்கு முன்பும்

                           -மஞ்சுளா 

manjulagopi04@gmail.com

Series Navigationகேள்விகள்BIGG BOSSம் BRAINWASHம்