தொலைந்த காலணி..

Spread the love

தி. ந. இளங்கோவன்

சீறிச் செல்லும் வாகனங்களிடையில்
ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த
புத்தம்புதிய பிஞ்சுக் காலணி…..
தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து
இரு சக்கர வாகனத்தின் இசைவில்
உறங்கிப் போன வேளையில்
காலணியைத் தவறவிட்ட குழந்தை
வீடு போய் விழித்தவுடன்
வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது
சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு
துக்கம் அனுஷ்டித்தது
தொலையாத இன்னொரு காலணி !

தி. ந. இளங்கோவன்

Series Navigationரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்மஹாளயத்தில் பொன்னம்மா யார்?