தொலைந்த காலணி..

This entry is part 31 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தி. ந. இளங்கோவன்

சீறிச் செல்லும் வாகனங்களிடையில்
ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த
புத்தம்புதிய பிஞ்சுக் காலணி…..
தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து
இரு சக்கர வாகனத்தின் இசைவில்
உறங்கிப் போன வேளையில்
காலணியைத் தவறவிட்ட குழந்தை
வீடு போய் விழித்தவுடன்
வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது
சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு
துக்கம் அனுஷ்டித்தது
தொலையாத இன்னொரு காலணி !

தி. ந. இளங்கோவன்

Series Navigationரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

2 Comments

  1. Avatar ஜெயஸ்ரீ ஷங்கர்

    அன்பின் தி. ந. இளங்கோவன்

    என் குழந்தையின் காலணி இதே போலத் தொலைந்த போது..
    இது பேசாமல் கடையிலேயே இருந்திருக்கலாம்….இப்போ
    பாரு ஜோடி தொலைந்து போச்சு என்று…இதே போல விழித்த
    இன்னொரு காலணியைப் பார்த்து நினைத்தேன்.

    கவிதை அருமை…உண்மை உணர்வுகளை நினைவு படுத்தியது.
    நன்றி.

  2. Avatar இளங்கோ

    கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஜெயஸ்ரீ.

Leave a Reply to ஜெயஸ்ரீ ஷங்கர் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *