நன்றி நவிலல்

Spread the love

கோமதி நடராஜன்

உடல்வலிமையும் ,மனவலிமையும்,
நிறைந்திருந்த நாளில்,
பூமியில் பதிந்த,
மலையைப் பெயர்த்துத் தரச்சொன்னார்,
நெம்பி எடுத்துத் தந்தேன்.
வேரோடியிருந்த ,
மரத்தைப் ,பிடுங்கித் தரச் சொன்னார்,
கிள்ளி எடுத்துக் கொடுத்தேன்.
மனமும் சோர்ந்த ,
உடலும் களைத்த ,
இன்று
தரையில் கிடந்த ஊசியைக் கேட்டார்,
”ஊசிதானே ,உன்னால் ஆகாதா ”என்றேன்
மலையையும் மறந்தார்
மரத்தையும் மறந்தார்
”உன்னால் ஒரு பிரயோசனமில்லை”
என்றவாறு அகன்றார்.

Series Navigationதோல்வியில் முறியும் மனங்கள்..!முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?