நரதிரவங்கள்

Spread the love
பா.சேதுமாதவன், திருச்சி. 

இரு சக்கர வாகனத்தில்
பணியிடம் விரைகையில்
மழலையின் மலர்த்தொடுகையாய்
உடல் வருடிச் செல்லும்
மென் குளிர்க்காற்று.
முது அரச மர முடியிலிருந்து
கலவைக்குரலெழுப்பி
புது நாளைத் தொடங்கும்
உற்சாக பட்சிகள்.
வாகனம் நெருங்குகையில்
கருஞ்சாம்பல் சுருள் காகிதங்களாய்
விருட்டென மேலெழும்
விசையுறு காகங்கள்.
விசால வீட்டின்
உயர்ச்சுவருக்கு மேலே
தலை நீட்டித் தெரு பார்க்கும்
சரக்கொன்றைப் பூக்கள்.
புறக்காட்சிகளளிக்கும்
அகத்தூண்டுதல்களிழந்து
வெளி வரும் நாள் நோக்கி
வீட்டுக்குடுவைக்குள் அடைபட்டிருக்கும்
நரதிரவங்களாய்
எண்ணற்ற நான்கள்.
 
                  ###$#######$###
பா.சேதுமாதவன், திருச்சி. 
Series Navigationபூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்குவிலங்கு மனம்