நாளைய தீபாவளி

Spread the love

கேம்பல் லேன்

கும்பல் லேனாவது

இன்றுதான்

கலைஉலகச் சிகரங்கள்

இலை விரிக்கும் நாள்

இன்றுதான்

நகரத் தெருக்கள்

நகை அணியும் நாள்

இன்றுதான்

மனிதரோடு வீடுகளும்

புத்தாடை அணிவது

இன்றுதான்

சோப்பு வேண்டாம்

எண்ணெய்க் குளியல்

இன்றுதான்

தீயின் தீண்டலில்

மத்தாப்பூச் சிரிப்பது

இன்றுதான்

முறுக்குரல்கள்

சுறுசுறுப்பாவதும்

இன்றுதான்

இனி

பறக்கும் டாக்‌ஸியில்

நானூறடி உயரத்தில்

கொண்டாடுவோம்

நாளைய தீபாவளியை

அமீதாம்மாள்

Series Navigation5. பாசறைப் பத்துமுதியோர் இல்லம்