நினைவலைகள்

Spread the love

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி

துரிதமாகப் புறப்பட்டது

என் எண்ணக் குதிரை

சிறகடித்து வானில்

காதல் நிறங்களோடு

உன்னைச் சுமந்தபடி

உன்னிடத்தில்.

 

 

நீண்ட கருவானில்

அலங்கரிக்கப் பட்ட

நட்சத்திரங்கள் சாட்சி.

 

 

நினைத்த மாத்திரத்தில்

உன் பிம்பத்தை

வடித்து விடுகிறது மனம் !

 

 

எத்தனை யுகங்கள்

கடந்திருக்கும்

இந்தக் காதலின் 

தொடர்ப்பயணம் ?

 

 

இங்கெல்லாம் இது

சுரப்பியின் லீலையாக

சுதி குறைக்கப் பட்டது.

 

 

இந்த மனிதர் களுக்குத்

தெரிய வில்லை

காதல் இல்லை

என்றால் சுரப்பியும்

நீர்த்துப் போகும் என்று.

Series Navigationபெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியாமது அடிமைத்தனம்