நிரம்பி வழிகிறது !

அவன் மனம் முழுவதும் 

பணத்தாட்கள் 

முளைத்துக் கிடக்கின்றன

தன்னை 

ஒரு கஜானாவாக

எண்ணியெண்ணி

அவன் மகிழ்கிறான்

பணத்தேடலில்

அவன் கோரமுகம்

பரிதாபமாய்ச் சிரிக்கிறது

தலை சீவி முயலும் போது

கொம்புகள் தடுக்கின்றன

கற்ற கல்வியோ அவனிடமிருந்து

விலகியே நிற்கிறது 

பிறர் உழைப்பின் பயன்

அவனும்

நிரம்பி வழிகிறது …

Series Navigationவீடு “போ, போ” என்கிறதுதோள்வலியும் தோளழகும் – இந்திரசித்