நிறமற்றப் புறவெளி

விழி திறந்த பகலில்
மொழி மறந்து மௌனமானாய்
இமை மூடிய இரவில்
தலைக்கோதி தாலாட்டினாய்
நிழல் விழும் தூரத்தில்
நீ எனது உறவானாய்
தென்றலாய் எனைத் தொட்டு
தீண்டும் இன்பம் தந்தாய்
இளங்காற்றாய் மாறி
வனப்பூக்களின் காதலை வளர்த்தாய்
கடுங்காற்றாய் உருமாறி
காதல் வேதனையைத் தந்தாய்
நிறமற்றப் புறவெளியில்
உருவற்ற உனை
தலையசைத்து அறியவைத்தேன்
எனை மறந்த நீயோ
கடல் அலையைக் கைப்பிடித்து
உடல் பிணைந்த மறதியில்
புயலாய் வந்து சாய்த்து
மரமான என்னை
மரிக்க வைத்துவிட்டாயே – என்
காற்றுக் காதலியே…!

Series Navigationடௌரி தராத கௌரி கல்யாணம்…! – 7ஜங்ஷன்