நிலவுடன் ஒரு செல்பி

Spread the love

கனவு திறவோன்

எத்தனை இடங்களில் காத்திருந்தேன்
எங்கும் அவள் வரவில்லை
அவள் வராமலிருக்க
எத்தனையோ காரணங்கள்
என்னைக் காதலிக்காததும் சேர்த்து
என்னை நான் எத்தனை முறை
படம் பிடிப்பேன்?
அத்தனையிலும்
என் நிழல் இருந்தது
ஆனால் உயிரில்லை?
அவளில்லா செல்பி
வெறும் யுனரி (ஒருமக்) குறியீடு தான்!

எங்கும் நீ வந்தாய்
சில நாட்களில் சின்னதாய்
சிரித்து மறைந்தாய்
சில நாட்களில்
என்னையும் சிரிக்க வைத்து மறைந்தாய்
இன்று உன்னோடு
ஒரு செல்பி எடுத்திட வேண்டும்
விடிந்தது முதல்
அஸ்தமனத்திற்குக் காத்திருந்தேன்
இருள் கவிழ்ந்தும் நீ வெளி வரவில்லை
இருளில் எனைத் தேடாமல்
உனைத் தேடும்
எனக்குப் புரியவில்லை
நீயும் உன்னவளைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்று
நீயும் யுனரி (ஒருமக்) குறியீடு தானோ.

Series Navigationபிசகுசொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்