நிழலின் படங்கள்…

எங்கிருந்தோ கூவுகிறது

தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி

மெல்லிய  அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக

அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி

சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்

சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்

ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற

தொலைத்த சுவடுகளில்

பாதம் பதித்து  மீண்டும்

எழுந்தன மூடி வைத்த

நிழற்படங்கள்

ஷம்மி முத்துவேல்
Series Navigationநெருப்பின் நிழல்வட்ட மேசை