நிழல் தந்த மரம்

Spread the love

 

சூர்யா நீலகண்டன்

 

ஆல மரம் எப்படி இருக்கும்

என்று சிறுவன் தன்

தந்தையிடம் கேட்டான்.

 

வீட்டிற்கருகில் மரமொன்றும்

இல்லாததால் கூகுளிலிருந்த

மரமொன்றை கொண்டு வந்து

கணினித் திரையில் நட்டார்

சிறுவனின் தந்தை.

 

கணினி திரையினுள் அந்த

மரத்தின் நிழலும் பரந்து

இருந்தது..

 

களைப்பாகும் நேரமெல்லாம்

அந்த விழுதுகளில்

தொங்கிக் கொண்டே

இளைப்பாறுகிறான்

அந்த சிறுவன்…

Series Navigationமருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்கருவூலம்