படிமை திரைப்பட பயிற்சி இயக்கம்நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோ தனது கனவுத் திட்டமாக தொடங்கிய படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் முதல் பேட்ச் பல தடைகள் தாண்டி முடிந்துள்ளது. இதில் சேர்ந்த மாணவர்கள் கற்றார்களோ இல்லையோ, நான் நிறைய கற்றுக் கொண்டேன். மனிதர்களைப் பற்றி. இதன் இரண்டாவது பேட்ச் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது. 

படிமை என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள நீங்கள் எங்களுடன் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும். படிமை என்று google இல் சென்று தேடித் பாருங்கள். எண்ணற்ற கட்டுரைகள் வரும். கற்றுக்கொடுப்பதை கற்றலின் மூலமே செய்ய முடியும் என்பதை விளக்கும் ஒரு நெடிய பயணமே படிமை.
இங்கே பேராசிரியர்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. கல்விக்கூடம் போன்ற அமைப்பு இல்லை. புரியாத மொழியான ஆங்கிலத்தில் பயிற்சி இல்லை. திரைப்படம் என்றால் என்ன? திரைப்படம் எப்படி எடுப்பது? என்பதை மிக சுலபமான வழியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் இடமே படிமை. புரியாத பல பெயர்களை சொல்லி இவர்களை தெரியுமா? இந்த தொழில்நுட்பம் தெரியுமா? என்றெல்லாம் உங்களை யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் உங்கள் மனதுக்கு திருப்தியான திரைப்படம் எப்படி எடுப்பது? முதலில் திரைப்படங்களை எப்படி ரசிப்பது? என்பதையெல்லாம்தான் நீங்கள் படிமையில் கற்றுக்கொல்லவிருக்கிறீர்கள்.
படிமை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று இலக்கியம், இரண்டு களப்பணி, மூன்று திரைப்பட தொழில்நுட்பம்.
முதலில் இலக்கியம். 
தமிழ், இந்திய, உலக இலக்கியங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி. ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கிய தேவையான் கதைக் களத்தை தேர்வு செய்யும் திறமையை உங்களுக்குள் வளர்க்கும் இந்த படிநிலையே திரைப்பட பயிற்சியின் முதல் படிநிலை. இதன் மூலம் நீங்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுத வேண்டாம்? எல்லா இலக்கியத்தையும் தேடி தேடித் படிக்க வேண்டும் என்கிற ஆவலை மட்டுமே இந்த இலக்கியப் பகுதி உங்களுக்குள் வளர்க்கும். இதில் பாடத்திட்டம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஆனால் முதல் நிலை ஆர்வலர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்படும். தொடர்ந்து படிப்பது, அது பற்றி விவாதிப்பது, கட்டுரைகள் எழுதுவது, புதிது புதிதாக கருத்துக்களை மீள் உருவாக்கம் செய்தல் போன்றவையே இதன் நோக்கம். இங்கே உங்களுக்கு தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் மட்டுமே வருவார்கள். அவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் இலக்கிய வகுப்பை முன்னெடுத்து செல்வீர்கள்.
இரண்டாவது களப்பணி. 

கதை எனும் மிக உறுதியான ஒரு கட்டுமானத்தை உருவாக்கியப் பின்னர் அதன் உறுதித் தன்மை குறித்து உங்களை நீங்களே மறு ஆராய்ச்சி செய்துப் பார்க்கும் பகுதி. ஒரு கிராமம், மாவட்டம், வேற்று மாநிலங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மிகவும் பிரச்சனைக்குரிய இடங்களுக்கு சென்று (யாருடைய உதவியும் இல்லாமல்) அந்த மக்களோடு பழகி, அவர்களுடன் உணவு உண்டு, அவர்களின் பிரச்சனைகள் பற்றி தெரிந்துக் கொண்டு ஒரு சமூகத்தின் பிரச்சனைக்கான வேர்களை தேடி செல்லும் உங்கள் பயணமே இந்த களப்பணி. இதிலும், உங்களுக்கு ஆலோசனை வழங்க, நீங்கள் போக வேண்டிய இடங்களை உங்களுக்கு எடுத்து சொல்ல நிறைய களப்பணியாளர்கள் வருவார்கள். உங்களோடு கலந்துரையாடுவார்கள். 

மூன்றாவது திரைப்பட பயிற்சி.

கதை, களப்பணி எல்லாம் முடிந்து உங்கள் திரைப்படத்தை சரியான வடிவில் வார்த்தெடுக்கவே இந்த திரைப்பட பயிற்சி. இதில் நடிப்பு, திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்ட திரைப்படத்தின் எல்லா தொழில்நுடபங்களும் உங்களுக்கு பயிற்றுவிக்கப்படும். உங்களுக்கு பயிற்சியளிக்க திரைப்படத் துறையில் பணியாற்றுக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட ஆய்வாளர்கள் வருவார்கள். 

இதுமட்டுமின்றி, ஆர்வலர்களின் மனநிலையை ஆய்ந்து சொல்ல ஒரு மனநல ஆலோசகர், உங்கள் உடலினை உறுதி செய்ய உடற்பயிற்சியாளர் உட்பட பலர் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்.  தமிழ் ஸ்டுடியோவின் படிமை திரைப்பட பயிற்சியகத்தின் கற்றுக்கொள்ளும் முறை இதுதான். 

இதில் நீங்கள் சேர விரும்பினால், தாரளமாக சேரலாம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு:


* நிச்சயம் உங்கள் வயது முப்பதுக்கு மேல் இருக்க கூடாது. 
* எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம்.
* நிறையப் படிக்கும் பழக்கம் / ஆர்வம்.
* நிறைய ஊர்சுற்றும் பழக்கம் /ஆர்வம்.
* பயிற்சி முடியும் வரை நீங்கள் ஆர்வலர்களே (படிமையில் யாரும் மாணவர்கள் அல்ல.. ஆர்வலர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்) தவிர
படைப்பாளிகள் அல்ல. 
* பயிற்சி முடியும் வரை வேறெந்த ஊடகங்களிலும் வேலைக்கு சேரக்கூடாது.. குறிப்பாக நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளில் 
   பங்கேற்க    
   கூடாது. 
* இதனால் எனக்கு என்ன பயன்? இதனை நான் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்விகளுக்கு படிமையில் இடம் இல்லை? ஆனால் அதுப் 
   பற்றி  விவாதிக்கலாம். 
* பயிற்சியை பாதியில் விட்டு விட்டு செல்லக்கூடாது. 
* தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளில் உங்களுக்கு விருப்பமுள்ளவற்றில் பங்கேற்க வேண்டும்.
இதெற்கெல்லாம் உங்களுக்கு சம்மதம் என்றால் நீங்களும் படிமையில் சேரலாம். படிமையி சேர பயிற்சிக் கட்டணம் எதுவுமில்லை. ஆனால் நீங்கள் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு செல்லக்கூடாது என்பதற்காக ஒரு சிறுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயிற்சி முடிந்ததும் அந்த கட்டணம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
தவிர படிமையில் உங்களுக்கான பயிற்சி முழுக்க முழுக்க கட்டணமற்றது. 
படிமையில் சேர விரும்பினால் தொடர்பு கொள்க: அருண் மோ. 9840698236படிமை பற்றிய சில கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 19) தோழி மீது ஆழ்ந்த நேசம்நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான பயிற்சிப்பள்ளி