பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்ரவரி 02 ஞாயிற்றுக்கிழமை

அன்பு நண்பர்களே,
நமது பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி சென்னை அடுத்த குன்றத்தூரில் 25 ஆண்டுகளைக் கடந்து எளிய மக்களின் கல்விப்பணியில் இயங்கி வருகிறது.
நமது  கல்விப் பணியில்  நமது பண்பாட்டு உணவுகளை மீட்டுருவாக்கும் எளிய முயற்சியாக 14 ஆண்டுகளாக உணவுத்திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.
இந்த ஆண்டும் நமது பண்பாட்டு உணவுத்திருவிழா பிப்பிரவரி 02  ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த உள்ளோம்
இ ந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் பங்கேற்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நம் மரபு  உணவுகள் அரங்கில் பகிரப்பட இருக்கின்றன தாங்கள் தங்கள் ஊடகத்தின் சார்பில்  விழாவில்  பங்கேற்கவும் இச்செய்தியை, நிகழ்வை தங்கள் ஊடகங்களில் பகிரவும் அழைக்கிறோம்.
இத்துடன் விழா அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
தங்கள் பங்கேற்பை எதிர்நோக்கி.
அன்புடன்,வெற்றிச்செழியன்,முதல்வர், பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி,குன்றத்தூர்98409773439940234198

Series Navigationவைரஸ்படித்தோம் சொல்கின்றோம்:அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய உழவின் திசை