பயங்கரவாதி – மொழிபெயர்ப்புக் கவிதை

Spread the love

 

 
வசந்த தீபன்
 
அவர்கள் அனைவரும்
எங்களைப் போலவே இருந்தார்கள், 
தனியாக எதுவும் இல்லை
இயற்கையாகவே. 
 
ஆனால் இரவு இருட்டாக இருந்தது
மேலும், அவர்களின் அடையாளங்கள் இருட்டில் கேட்கப்பட்டன
அவர்கள் சொல்ல வேண்டியிருந்தன
மேலும், அவர்கள் சொல்ல இருந்த அவை 
அவர்கள் கேட்டதாக இருந்தது
ஏனென்றால் கண்டதும் காட்டியதும் போக முடியவில்லை
இருட்டில்
மேலும், சில காட்டப்பட்டு
எங்கோ போவதற்கு இருந்தாலும்
அதற்காகாவும் உசிதமானதாக இருந்தது என்று கொடுக்கப்படும்
விளக்குகளை அணைக்க. 
 
அப்பொழுது, குரல்கள் தான் அடையாளமாக ஆகின –
குரல்கள் தான் அவர்களின் சொந்த மதங்கள்,
இருட்டில் மற்றும் கருப்பு குரல்கள்உருவமுடையவரின் குரல்கள்
காற்றும் அவர்களுக்காக 
குரலாக இருந்தது, 
யாரும் தொடுவதில்லை
என்று அழுகையில் நடுக்கம் பரவியது. 
அது காதில் மட்டும் காற்று வீசும் ஒலியாய் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது
 மற்றும் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று
அவர்களுக்குப் பட்டது _
உலகில் என்ன குற்றமற்றது இருக்கிறது, என்ன குற்றமுள்ளது. 
 
இருந்தபோதிலும் அவர்களுக்கு தெரிந்து இருந்தது, 
ஏதோ ஒரு மதம் போன்றவை செய்தது
எந்தவொரு தேவையில்லை
ஆனால் மதங்கள் இருந்தன, ஒவ்வொன்றுக்கும் அவர்களால்
ஏதாவது தேவை இருந்தது
மேலும் இவ்விதம் மதமோ பரவாயில்லை அவர்களுடைய காரியத்திற்கு என்ன வந்தது
அந்த மதத்தின் காரியம் வந்து போனது. 
 
மதம் எதுவும் கிடைத்தது அவர்களுக்கு ஒரு புத்தகம் போல கிடைத்தது _
புத்தகம் ஒரு அறை போல, 
அதில் நடந்து கொண்டே அவர்கள் சிரத்தைக்கும் சலிப்புக்கும் நடுவே
அறை _  அதில் ஜன்னல்கள் தான் இல்லாமலிருந்தன
ஏதோவொரு ஒளி வர முடியும் அல்லது காற்று எங்கோ 
வெளியில் இருந்து
நிற்க, ஒரு கதவு இருந்தது, 
அதுவும் அந்த சில ஆயுத தொழிற்க்கூடங்களை நோக்கி
திறந்திருந்தது
சில கஜானாக்களின் பக்கம். 
 
மற்றும் இது மாதிரி
எதுவும் அவர்களின் கைக்கு வருகிறது _விரும்பிய மரணமும்
அதை அவர்கள் மூடுபனி என்று அழைத்தார்கள்
மற்றும் அது யுத்தம் _அதில் எல்லோருடைய தோல்வி தான் தோல்வியாக இருக்கிறது
வெற்றி எதிலும் இல்லை
அதை அவர்கள்  போராட்டம் என்று அழைக்கிறார்கள். 
 
🦀
 
ஹிந்தியில் : ராஜேந்திரக்குமார்
 
தமிழில் : வசந்த தீபன்
 
🦀
 
 
 
 
 
 
 
Series Navigationகுடிகாரன்இறுதிப் படியிலிருந்து – சார்வாகன்