பரிதாப மானுடன்

Spread the love

 

பா.சேதுமாதவன்

ஓடிக்கொண்டேயிருக்கின்றன
உற்சாக நதிகள்.
மோன நிலையில் உறைந்தேயிருக்கின்றன
மண் மீது மாமலைகள்.
நிலத்தடியில் கால் புதைத்து
கதிரவனின் வெம்மையையும்
நிலவின் குளுமையையும்
உள்வாங்கிக்கொண்டேயிருக்கின்றன
உன்னத மரங்கள்.
புவிக்கோளின் வெப்பம் தணிக்க
விசிறிக்கொண்டேயிருக்கிறது
காற்று.
பாடிக்கொண்டேயிருக்கின்றன
பரவசப்புட்கள்.
அகவயமாயும் புறவயமாயும்
அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்
பரிதாப மானுடன்
_ பா.சேதுமாதவன்

Series Navigationஜப்பானில் பேரழிவு செய்த அமெரிக்காவின் முதல் கோர அணுகுண்டுகள்கவிதைகள்