பறவையின் இறகு

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
67 -ம் பக்கஎண் அடையாளமாக
ஒரு பறவையின் இறகை
செருகி இருந்தேன்.

மீண்டும் வாசிக்கஎடுத்தபோது
83  -ம்பக்கத்தில்
பறவையின் இறகு இருந்தது.

இப்பொழுது
பறவையின் இறகை
கையில்வைத்துக்கொண்டு
கற்க ஆரம்பித்திருக்கிறேன்
67 -ம் பக்கத்தில் இருந்து
83  -ம் பக்கத்திற்கு
எப்படி பறப்பதென்று?

ரவி உதயன்
raviuthayan@gmail.com

Series NavigationNavarathri Celebrations 2011 NJ Tamil Sangamநியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்